விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
மணிமேகலையும், ஹூசைனும் திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர், இப்போது அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
கொரோனா லாக் டவுனில் மணிமேகலையும், ஹூசைனும் இந்த கிராமத்தில் தான் தங்கி இருந்தனர். அப்போதிருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைக்கும் கிராமத்துக்குச் சென்று, தங்கள் நண்பர்களை சந்தித்து, வீடியோ போடுவதை மணிமேகலை வழக்கமாக்கி விட்டார். மணிமேகலையின் குடும்பத்தினரும் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
சமீபத்தில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில், ஹூசைன் மணிமேகலை ஃபேன்ஸ் பெஸ்டிவல் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷகிலா, ஹூசைன் உன்னைய முஸ்லிம் மதத்துக்கு மாத்துறாறு சொல்றாங்களேனு கேட்க அதற்கு பதிலளித்த மணிமேகலை, அதெல்லாம் அவுங்க ஜாலிக்காக கமெண்ட் போடுறாங்க.. நான் இப்போவும் மணிமேகலை ஸ்ரீ ராம ஜெயம் தான்..
எனக்கு எல்லா மதமும் ஒன்னுதான். இது சும்மா சொல்றதுக்கு மட்டுமில்ல. அது மனசுல இருக்கிறதுனால தான் நாங்க ரெண்டு பேரும் கணவன், மனைவியா இருக்கோம்.
நான் ஹூசைன் கூட நிறைய போட்டோஸ் போட்டுருக்கேன், அவுங்களும் என்கூட நிறைய கோயிலுக்கு வந்துருக்காங்க… நாங்க ரெண்டு பேரும் ரம்ஜான் கொண்டாடுனதை விட அதிகமா கோயில்ல சாமி கும்பிட்டிருக்கோம்.
எங்களுக்கு கல்யாணம் ஆன முதல் நாள், நிறைய பேரு மதங்களை தாண்டி கல்யாணம் பண்ணிட்டீங்கன்னு சொல்லி எங்களை ரொம்ப வாழ்த்துனாங்க..
ஆனாலும் சில பேரு இதெல்லாம் ஒரு ஆறு மாசம் தான், இது அப்படியே முடிஞ்சிடும்னு சொன்னாங்க.. அப்புறம் ஒரு வருஷம் ஆச்சு. ரெண்டு வருஷம் ஆச்சு.. நீங்களாம் பணம் இல்லைனா தானா ஓடிடுவீங்கனு சொன்னாங்க.
3 வருஷம் ஆச்சு, பணம் இல்லன்னா ஒன்னுமே இல்ல உங்களுக்கு, உங்க வாழ்க்கை முடிய போகுதுன்னு சொன்னாங்க.. அப்புறம் பி.எம்.டபிள்யூ., வீடு எல்லாமே வந்தது.
இந்தமாதிரி 70 வயசு ஆனாலும் நீங்க வயசானதுக்கு என்ன ஆகுவிங்க பார்க்கலான்னு தான் சொல்லுவாங்க..
அப்படி சொல்றவங்களை பத்தி எனக்கு கவலை கிடையாது. நான் மணிமேகலையா தான் இருக்கேன். இப்படி தான் இருப்பேன். அதுக்கான முழு உரிமை, முழு சுதந்திரம் என்னோட கணவர் ஹூசைன் எனக்கு கொடுத்துருக்காங்க…
என்னோட கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் நான் மணிமேகலையா இருப்பேன். ஹூசைனும் என்கூட கோயிலுக்கு வருவாங்க..
அதனால இந்த லவ் ஜிகாத் அது இதுன்னு பேசுறது எல்லாம் நிப்பாட்டுங்க.. நீங்க நினைக்கிற மாதிரி, படங்கள்ல பாக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. ஒருவேளை அப்படி நீங்க நினைச்சா அதை உடைக்கிற ஒரு கபிளா நாங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இருப்போம் என்று மணிமேகலை கூறினார்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.