சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisment
இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.
பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது.
பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில் இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார்.
Advertisment
Advertisements
ஆனால் இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மணிமேகலையை பின் தொடர்கின்றனர்.
மணிமேகலை கியூட் போட்டோஸ் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“