Advertisment

விஜே மணிமேகலை கட்டும் பிரம்மாண்ட ஃபார்ம் ஹவுஸ்

மணிமேகலையும், ஹூசைனும் தங்கள் சொந்த ஊரில் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர், இப்போது அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Manimegalai

VJ Manimegalai

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். ஆனால், மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

Advertisment

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

ஏற்கெனவே மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.

பிறகு, கொரோனா லாக் டவுனில் மணிமேகலை, தன் கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதிருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைக்கும் ஊருக்கு சென்று, தங்கள் நண்பர்களை சந்தித்து, வீடியோ போடுவதை மணிமேகலை வழக்கமாக்கி விட்டார். மணிமேகலையின் குடும்பத்தினரும் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

publive-image

மணிமேகலையும், ஹூசைனும் தங்கள் சொந்த ஊரில் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர், இப்போது அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் மணிமேகலை இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அதில் என்னுடைய பண்ணை வீட்டின் பில்லர் வலது புறத்திலும், என் வாழ்க்கையின் பில்லர் இடது புறத்திலும் என்று குறிப்பிட்டு மணிமேகலையும், ஹூசைனும் சேர்ந்து எடுத்த படத்தை பகிர்ந்துள்ளார். பின்பகுதியில் வீட்டுக் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் மணிமேகலை, ஹூசைன் ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment