சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த மணிமேகலை’ பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, இப்போது விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார். சமீபத்தில் கூட தனது கிராமத்துக்கு சென்ற மணிமேகலை, அங்கு பிரியா, பூமி, மற்றும் பசங்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இப்போது மணிமேகலை விஜய் டிவி செலிபிரிட்டிஸ் உடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றுள்ளார். அங்குதான் இப்போது டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது.
இதில் கடந்த 6 ஆம் தேதி, மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர்-12 லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இதில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியைத் தான் மணிமேகலை புகழ், பாலா, சாம் விஷால் உடன் நேரில் கண்டு ரசித்துள்ளார்.
இந்தியா வென்ற குஷியில் சாம் விஷால், ஃபைனல் போயிட்டோம் ஃபைனல்ஸ் போயிட்டோம் என உற்சாகத்தில் கத்துகிறார். அந்த வீடியோவை பார்த்த சில நெட்டிசன், யோ ஃபைனல்ஸ் போகல, செமி ஃபைனல்ஸ் தான் போயிருக்கோம்; ஃபைனல்ஸ்க்கும், செமி ஃபைனல்ஸ்க்கும் வித்தியாசம் தெரியலயா என கமெண்டில் பதிவிட்டுள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலிக்குமா?
குரூப்-1 பிரிவில் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால், குரூப் -2 பிரிவில் தகுதி பெற்றுள்ள இந்தியா அவ்விரு அணிகளில் ஒரு அணியுடன் மோத வேண்டும். பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரையிறுதிப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற வேண்டும்.
அப்படி ஒரு சம்பவம் நிகழுமா என்றுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“