இப்போது பல டிவி பிரபலங்கள் மாலத்தீவுக்கு டூர் செல்வது ஃபேஷனாகி விட்டது. அந்தவகையில் விஜய் டிவி பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவுக்கு டூர் சென்ற வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். மேலும் ’பிரியங்கா தேஷ்பாண்டே’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.
அதில் பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவுக்கு டூர் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அவருடன் மாகாபாவும், அவரது மனைவி சூசனும் மாலத்தீவுக்கு டூர் சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீலங்கா சென்று அங்கிருந்து மாலேவுக்கு ஃபிளைட் ஏறினர். அப்போது அதே ஃபிளைட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரம் இருக்க, பிரியங்காவும், மாகாபவும் அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். பிறகு பிரியங்கா அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து மாலேவில் லேண்ட் ஆன பிரியங்கா, அங்குள்ள இடங்களை சுற்றி காண்பித்தார்.


பிறகு பிரியங்கா, மாகாபா, சூசன் மூவரும் அங்கிருந்து கோட்டுஃபாரு தீவுக்கு சீ பிளேனில் சென்றனர். அங்குள்ள ரெசார்ட்டில் வைத்து, மாகாபாவின் மனைவி சூசனின் பிறந்தநாளை கொண்டாடினர். பிறகு டின்னர் சாப்பிடுவதற்காக குடாஃபுஷ் என்ற இடத்துக்கு சென்றனர்.
அந்த வீடியோ பாருங்க..
”வாழ்க்கையில நம்மள பாதிக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி உப்புத் தண்ணில போடுங்க, வாழ்க்கையில இருக்கிறதுலேயே என்ன சந்தோஷம் தெரியுமா, நிம்மதி, தூங்கும் போது நிம்மதியா தூங்கணும், எந்திரிக்கும் போது நிம்மதியா எந்திச்சுக்கணும் அந்த மாதிரி விஷயங்களை மட்டும் கூட வச்சுக்கிட்டு பாக்கி எல்லாம் தூக்கி தூரப் போடுங்க” என்று வீடியோவை முடிக்கிறார் பிரியங்கா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“