மும்பையில் விஜய் டி.வி பிரியங்கா: 'சல்மான்- ஷாருக் சில் பண்ண கூப்பிட்டாங்க'

பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Priyanka

VJ Priyanka

விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.  மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

ஹலோ மக்களே நான் இப்போ மும்பையில இருக்கேன். நீடா அம்பானியோட கல்ட்சுரல்ஸ் செண்டருக்கு போறேன்.

Advertisment
Advertisements

என் ஃபிரெண்ட் சல்மான்கானும், ஷாருக்கானும், என்னை பாக்கணும் சொல்லி எனக்கு மெசெஜ் பண்ணாங்க. நானும் சரி மச்சான் நம்ம மீட் பண்ணலாம்னு சொன்னேன். அவுங்க என்னை பாக்கிறதுக்காக வருவாங்க.. அதனால தான் கொஞ்சம் லிப்ஸ்டிக், மேக்கப் போட்டிருக்கேன் என்று தன்னோட ஸ்டைலில் வீடியோவுக்கு எண்ட்ரி கொடுத்த பிரியங்கா, திருபாய் கல்ட்சுரல்ஸ் செண்டருக்கு போகிறார்.

publive-image
publive-image

ஸ்டேஜ்ல இருந்து ஒரு 10 சீட்டு தள்ளி நாங்க உட்காந்துட்டு இருக்கோம், செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனா அறிவு வளக்கிறதுக்கு இந்தமாதிரி செலவு பண்ணும் போது அது ஒரு நல்ல அனுபவம் தான்.

இதைப் பாத்துட்டு என் மொட்டை மாடிலயாவது பிரியங்கா கல்ட்சுரல்ஸ் செண்டர் ஒன்னு நான் ஆரம்பிக்க போறேன்… என்ற பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டு, ஆட்டோவில் பாந்தராவுக்கு செல்கிறார்.

பாந்த்ராவை சுற்றிப் பார்த்த பிரியங்கா, அங்குள்ள பிரபல ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு அப்படியே பீச் செல்கிறார்.

publive-image

மும்பை வந்துட்டேன், ஷாருக்கானை பார்க்கலனாலும், அவர் வீட்டு வாசல்ல நின்னு ஐ லவ் யூ சொல்லாம போயிட்டோம்னா அதுல ஒரு அர்த்தமே கிடையாது… என்று நேராக ஷாருக்கான் வீட்டுக்குச் சென்ற பிரியங்கா நுழைவில் உள்ள சிசிடிவி கேமிராவை பார்த்து ஐ லவ் யூ பச்சா என்று கத்துகிறார்.

இந்த வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: