பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள், போட்டோஷூட் என பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா சமீபத்தில் துபாய் டூர் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
சென்னையில் இருந்து விமானத்தில் ஏறிய உடனே பிரியங்கா வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டார். ரொம்ப நாளைக்கு அப்புறம் துபாய்க்கு போறேன். ஏற்கெனவே முக்கியமான ரெண்டு பேரு இன்னைக்கு காலையில துபாய் போய் இறங்கிட்டாங்க. அங்க போயி இந்த மூனு நாளு என்ன செய்ய போறேன் அப்புறமா உங்களுக்கு சொல்றேன் என துபாய் ஏர்போர்ட்டில் பிரியங்கா இறங்குகிறார்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா அவரது ரூமில் இருக்க அங்கே அமீரும், பாவனியும் வருகின்றனர். பிறகு பாவனியும், பிரியங்காவும் புளிசாதம், அப்பளம் வைத்து நல்ல சாப்பிட்ட பிறகு ஒரு காரில் அவுட்டிங் செல்கின்றனர். அங்கே ஒரு பெரிய கட்டிடத்தில் 53வது மாடிக்கு சென்று ஸ்கை ஸ்லைட், ஸ்டை எட்ஜ் வாக் என விளையாடுகின்றனர். பின்னர் விதவிதமான கேக், 22 கேரட் கோல்ட் காஃபி சாப்பிடுகிறார்.
பிறகு தன் தோழியை சந்திக்க சென்ற பிரியங்கா, ஏற்கெனவே என்னோட காலேஜ் கேங் பாத்துருப்பீங்க. அதுல ஒருத்தர் மட்டும் மிஸ் ஆயிருப்பாங்க. அவங்கள தான் இப்போ பாக்க போறீங்க என தன் தோழி ஆயிஷா மற்றும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளை காட்டுகிறார். பிறகு அந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த வீடியோ பாருங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“