விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா. சில படங்களிலும் நடித்துள்ளார்.
ரம்யா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வொர்க்அவுட் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவரும்.
அப்படி ரம்யா சமீபத்தில் டிசைனர் வினோ சுப்ரஜா டிசைன் செய்த புடவை அணிந்து எடுத்த போட்டோ இன்ஸ்டாவில் பலரை கவர்ந்தது.
’புடவை மட்டும் இல்லை. இது ஒரு கதை
இதைப் பற்றி என்னிடம் கேட்கும் உங்கள் அனைவருக்கும்,
இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள எனக்கு கிடைத்ததெல்லாம் இதுதான் !
ரிசைக்கிள்டு பிளாஸ்டிக் பாட்டில்களை (recycled PET bottles) கொண்டு தயாரித்த இந்த லைட் வெயிட் புடவை, 'தெருக்கூத்து' கலையில் இருந்து ஈர்க்கப்பட்டு பிரிண்ட் செய்யப்பட்டது.
இது வினோ சுப்ரஜாவின் புரிசை (PURISAI) கலெக்ஷனில் இருந்து, எனது விசேஷ நாளுக்காக அணிய சேமித்து வைத்திருக்கிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் உலகளாவிய பிரதிநிதித்துவமாக மாறிவிட்டது. ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன…
இப்போது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து செய்யப்பட்ட புடவைகள் இளம் தலைமுறை பெண்களை ஈர்த்து வருகிறது.
உண்மையில், லண்டனில் மறைந்த ராணி எலிசபெத்தின் பிளாட்டினம் விழாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட புடவைகள் பயன்படுத்தப்பட்டன.
இங்கு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை, நார்களாக (fibres) மாற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த இழைகள் ஒரு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன, அவை அவற்றை நூலாக மாற்றி, அவற்றை நெசவு செய்து துணிகளாக மாற்றுகின்றன. இப்படித் தான் இந்த புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன.
உங்களுக்கும் ரம்யா உடுத்தியிருக்கும் புடவை பிடித்து இருக்கிறதா? இந்த புடவையில் விலை ரூ.6,500…
என்ன விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“