VJ Ramya Skincare Routine Tamil News : 'வயது கூடக்கூட இவருக்கு மட்டும் இளமை திரும்புதோ?' என விஜே ரம்யாவின் பளபளக்கும் சருமத்தைக் கண்டு ஆச்சரியப்படாத பெண்களே இல்லை. அது எப்படி இவங்களுக்கு மட்டும் சுருக்கங்கள் இல்லாத சருமம் இருக்கிறது என்று பலர் கேட்ட கேள்விக்கு தன் யூடியூப் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார் ரம்யா.
VJ Ramya Skincare Routine
"ஒவ்வொருவருடைய சருமமும் வித்தியாசமானது. அதனால், நான் பயன்படுத்துகிற பொருள்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது" என்கிற அலெர்ட் குறிப்போடு தன்னுடைய ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை அடுக்கினார் ரம்யா. "உடலுக்குப் புரதம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நம் சருமத்திற்கும் முக்கியம். அந்த வகையில் கொலாஜென் நம் சருமத்திற்குத் தேவையான புரதத்தை அளித்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை மதிய உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்வது என் வழக்கம். நிச்சயம் இது மாற்றத்தை ஏற்படுத்தும்.
VJ Ramya Spotless Skin Tips
அடுத்தபடியாக சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தவும் பளபளக்கும் சருமம் பெறவும் நான் உட்கொள்வது 'ஒயிட் பைன் கேப்சியூல்ஸ்'. இதனை மருத்துவர்களின் அறிவுரையின்படி உட்கொள்வதுதான் சிறந்தது. சிலருக்கு ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும் சிலருக்கு மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால், தொடர்ந்து உட்கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
அடுத்தபடியாக நான் வாங்கியிருக்கும் ஒரு பொருளின் விலை ரூ.500. இதில் என்ன ஆச்சரியம் எனக் கேட்பவர்களுக்கு, இந்தப் பொருள்தான் பதில். அந்தப் பொருள்தான் தேங்காய் எண்ணெய். சாதாரண தேங்காய் எண்ணெய் இல்லை, இது எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய். இதில் என்ன அப்படி ஸ்பெஷாலிட்டி என்று பார்க்கும்போது இந்தத் தேங்காய் எண்ணெய்யைப் பலவிதமாகப் பயன்படுத்தலாம். முதலாவதாக ஒரு ஸ்பூன் இந்த தேங்காய் எண்ணெய்யுடன் 3 ஸ்பூன் தண்ணீர் கலந்து இதனை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். அடுத்தபடியாக, இந்தத் தேங்காய் எண்ணெய்யை அப்படியே எடுத்து உதட்டில் தடவி லிப்-பாமாக உபயோகிக்கலாம். ஒரு ஸ்பூன் எண்ணெய்யோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து அதனை ஸ்கரப் போன்று உபயோகிக்கலாம். அதேபோல ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றிக் கொப்பளித்தால், ஆயில் புல்லிங் ஆக்டிவிட்டி முடிந்தது. மேலும், இதனைத் தலைக்குத் தேய்த்துப் பயன்படுத்தலாம், சமையலுக்குப் பயன்படுத்தலாம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை இந்த ஒரே எண்ணெய்யில் செய்யலாம்" என்று நிறைவு செய்கிறார் ரம்யா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"