வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்... 65 மில்லியன் வியூக்களை தாண்டிய பாம்பு 'ப்ராங்க்' வீடியோ

பாம்பு என்றாலே பயம் என்று தான் நினைக்கத் தோன்றும் அல்லவா? அப்படிப்பட்ட பாம்பை வைத்து தான் ‘ப்ராங்க்’ வீடியோ செய்திருக்கிறார் இந்த நபர். இங்கிலாந்தைச் சேர்ந்த மேஜிக்காரர் தான் நெய்ல் ஹென்றி, ஒரு பெரிய பாம்பைக் கொண்டு மக்களை மிரள வைத்திருக்கிறார்.

இது பொய்யான பாம்பு தான் என்ற போதிலும் திடீரென பார்க்கும் போது யார் தான் பயப்பட மாட்டார்கள்? அப்படி அச்சம் கொள்ளச் செய்யும் இந்த பாம்பைக் கொண்டு என்னென்ன வேடிக்யெல்லாம் செய்து காட்டியிருக்கிறார் பாரூங்கள். இந்த வீடியோ வயிறு குலுங்க சிரிக்க வைப்பதோடு, செம்ம வைரலான வீடியோவாக மாறியுள்ளது. பதிவிடப்பட்ட இரண்டு நாட்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 65 மில்லியன் வியூக்ளை தாண்டிவிட்டது!

யதார்த்தமாக நடந்து கொண்டிருக்கும் நபர்கள் முதல் ஜாலியாக பீர் குடிக்கும் நபர்கள் வரை அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் ஹென்றி.

இது வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் சிலர் இதனை விமர்சித்துள்ளனர். இது வேடிக்கையாக இல்லை என்றும், இதனால் சிலருக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துவிட வாய்ப்பு உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

×Close
×Close