scorecardresearch

எடை குறைப்பு: நீங்க பண்ணுற 10 தவறுகள் இவைதான்; ‘டயட்’-ல் இந்த மாற்றத்தை உடனே செய்யுங்க!

உடல் எடை குறைக்கும் முயற்சியில் செய்யக்கூடாத 10 தவறுகள் என்ன என்பது குறித்து சாகேத் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் ரோமல் டிகூ கூறுகிறார்.

lifestyle
எடை இழப்பு பற்றி மனதில் கொள்ள வேண்டியது இங்கே

டாக்டர் ரோமல் டிகூ

இந்தியர்களின் எடை இழப்பு பயணத்தில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்கள் மருத்துவரின் பேச்சைக் கேட்பதை விட மற்ற எல்லா ஆதாரங்களையும் நம்புகிறார்கள். அவர்கள் இணையத்தில் உள்ள ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையையும் படிப்பார்கள், ஆனால் அது அவர்களுக்குப் பொருந்துமா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்க மாட்டார்கள். உடல் எடையை குறைக்கும் முயற்சியில், சிலரின் உடல் அதற்கு ஏற்றதாக இல்லாததால், பல நோயாளிகள் தீவிர சோர்வு இருப்பதாக என்னிடம் புகார் அளிக்கின்றனர்.

எனவே, புதிய ஆண்டிற்கு, நான் செய்ய வேண்டிய பட்டியலை பரிந்துரைக்க மாட்டேன், ஆனால் செய்யக்கூடாத விஷயங்களை சொல்கிறேன். மேலும், இது எடையைக் குறைப்பது பற்றியது அல்ல, சரியான எடையை வைத்திருப்பது பற்றியது.

1) காலை உணவை தவிர்க்க வேண்டாம்

2) இன்ஸ்டண்ட் உணவுகள், வறுத்த தின்பண்டங்கள் சாப்பிட வேண்டாம்

3) ஃபேட் டயட், கெட்டோ டயட் பேலியோ டயட்களில் கவனம் செலுத்த வேண்டாம்.

4) வாரம் முழுவதும் டயட்டில் இருந்து ஒருநாள் மட்டும் அதிகம் சாப்பிடக்கூடாது.

5) அவசரமாக உணவை விழுங்க வேண்டாம். நன்கு மென்று சாப்பிடவும்.

6) தவறான உணவு காம்போ வேண்டம்

7) நிலையான தூக்கம் அவசியம்

8) அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம்

9) சப்ளிமெண்ட்களை நம்பாதீர்கள்

10) நம்பத்தகாத இலக்குகளை அமைக்காதீர்கள், மனதை அமைதியாக வைத்திருங்கள்.

பெரிய இலக்குகளை சிறியதாகப் பிரிக்கவும், பின்னர் அவற்றை தினசரி இலக்குகளாகப் பிரிக்கவும். எடை தராசு மூலம் உங்களை மதிப்பிடாதீர்கள். ஒரே நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்தவும் ஓய்வெடுக்கவும் யோகா மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Weight loss tips 10 things keep in mind about weight loss

Best of Express