Advertisment

செல்வம், வளர்ச்சியை ஈர்க்கும் தீபாவளி மகாலட்சுமி பூஜை.. குல தெய்வ வழிபாடு

லட்சுமி தேவி விஷ்ணுவின் தெய்வீக மனைவி. எனவே, அவரையும் சேர்த்து வழிபடுவது முதன்மையானது. மேலும், செல்வத்தின் கடவுளான குபேரனை தீபாவளியன்று வழிபடுவதால் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
Welcome Maa Lakshmi this Diwali 2022 Complete guide to attract wealth

செல்வம் கொடுக்கும் லட்சுமி பூஜை வழிபாடு

தீபாவளி மற்றும் லட்சுமி பூஜை நாள்களில் செல்வத்தை ஈர்ப்பது எப்படி என்பது குறித்து ஜோதிடர் சித்தார்த் எஸ் குமார் நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது அவர், “தீபாவளி பண்டிகை என்பது இருளை அகற்றி ஒளியை கொடுக்கும் ஒரு அற்புத பண்டிகை ஆகும். ஆகவே இத்தினத்தில் உங்களின் வீடு, அலுவலகம், பூஜை அறை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தேவையில்லாத பொருள்களை அகற்றி விடுங்கள். குறிப்பாக பூஜை அறையில் காணப்படும் தேவைப்படாத பொருள்களை எடுத்து சுத்தமாக வையுங்கள்.

மனதிற்கு நெகடிவ் ஆக காணப்படும் பொருள்களையும் அங்கு வைக்க வேண்டாம். தீபாவளி மற்றும் லட்சுமி பூஜை தினத்தில் மனதை நேர்மறையாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

முதலில் மனது மற்றும் வீட்டில் உள்ள நெகடிவ் விஷயங்களை அகற்ற மந்திரங்கள் ஓதலாம். குத்து விளக்கில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றலாம்.

மேலும் ஆடியோ அல்லது வீடியோ வடிவில் மந்திரங்களை ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் ஓட விடலாம். அதேபோல் வீட்டில் மகாலட்சுமி மற்றும் பிள்ளையார் உள்ளிட்ட திருவுருவ சிலைகள் இருந்தால் அபிஷேகம் செய்வதும் அவசியம்.

லட்சுமி பூஜை செய்வது எப்படி?

மகாலட்சுமியை வழிபடவும், அவரது தெய்வீக பிரசன்னத்தில் மகிழ்ச்சியுறவும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

1) எந்த ஒரு நல்ல செயலுக்கும் முன் விநாயகப் பெருமானை வழிபடுவார்கள். எனவே, விநாயகப் பெருமானை வணங்கி உங்கள் தீபாவளி பூஜையைத் தொடங்குங்கள்.

2) உங்களின் குலதேவி, குல தெய்வம் அல்லது இஷ்ட் தெய்வத்தை முதலில் நினைத்துக் கொள்ளுங்கள். பூஜையை முன்னெடுத்துச் செல்வதற்கு முன் அவர்களின் பெயர்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆசிகளைப் பெறவும்.

3) இப்போது, லட்சுமி தேவியை மகிழ்விக்கும் நேரம் வந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு அவள் இங்கு வந்திருப்பதால், அவளைத் தூய்மையான இதயத்துடனும், நிம்மதியான மனத்துடனும் வணங்குங்கள்.

4) லட்சுமி தேவி விஷ்ணுவின் தெய்வீக மனைவி. எனவே, அவரையும் சேர்த்து வழிபடுவது முதன்மையானது. மேலும், செல்வத்தின் கடவுளான குபேரனை தீபாவளியன்று வழிபடுவதால் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

5) லட்சுமி தேவியின் ஆரத்தியைப் பாடி தீபாவளி பூஜையை முடிக்கவும். தொடர்ந்து பிரசாதத்தை அண்டை வீட்டார் உள்ளிட்ட அனைவருக்கும் கொடுங்கள்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment