Advertisment

நீங்கள் குண்டாக இருக்க இதுதான் காரணமா?

அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yoga Asanas to Reduce Belly

Yoga Asanas to Reduce Belly

பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி.

Advertisment

அதிகமான அளவு உணவும், குறைந்த அளவு உடற்பயிற்சியும் தான் உடல் எடை அதிகரிக்க காரணம் என்று நூறு சதவீதம் கூறிவிட முடியாது. நமது உடலில் இருக்கும் சில ஹார்மோன்களும் கூட நமது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். சரி உண்மையில் உடல் எடை அதிகரிக்க என்னதான் காரணம் என்பதை பார்ப்போமா?

1. மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.

2. உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது.

3. சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள்.

4. உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5.எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

6. வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும்.அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment