வல்லுநர்கள் கோவிட் புதிய தொற்றுகள் குறித்து ஆய்வு செய்யும்போது , இந்தியா சமீபத்தில் அஸாம் மருத்துவர் ஒருவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் இரண்டு கோவிட் திரிபு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.
அந்த மருத்துவர் ஆல்பா மற்றும் டெல்டா ஆகிய இரு வகை திரிபு வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதேபோன்ற நோய்த்தொற்றுகள் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டு கோவிட் திரிபு வகைகளுடன் இணை தொற்று
சுவாசத்தை பாதிக்கும் வைரஸ்களின் இணை தொற்று அசாதாரணமானது அல்ல என்று புனேவில் உள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனையின் உள் மருத்துவம் - ஆலோசகர் மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் விச்சார் நிகாம், indianexpress.comக்கு கூறினார். "இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இணை சுவாச வைரஸ் (ஆர்.எஸ்.வி) அல்லது பாரேன்ஃப்ளூயன்சா போன்ற ஆர்.என்.ஏ வைரஸ்கள் இணை தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், டாக்டர் நிகாம் கூறுகையில், இப்போதைக்கு, இரண்டு கோவிட் வகைகளுடன் இணை-தொற்று ஏற்படுவது என்பது அரிதானவைஎன்று கூறலாம். “COVID-19 வைரஸின் பிறழ்வுகள் இத்தகைய இணை நோய்த்தொற்றுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. டெல்டா மற்றும் ஆல்பா இரண்டும் அதிகம் பரவக்கூடியவை ஆகும்.
யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? “நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மற்றும் இணை நோயாளிகளிடையே இணைதொற்றுக்கான ஆபத்து மிக அதிகம் உள்ளது. தனிப்பட்ட நோயெதிர்ப்பு முன்னேற்றம் நோய்க்கு இணை தொற்றுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். புது டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சிக்கலான பராமரிப்பு, மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜேஷ் சாவ்லா கூறுகையில், சுவாச வைரஸுடன் இணை தொற்றுகள் உருவாகலாம்.
கோவிட் தடுப்பூசி உதவுமா?
தடுப்பூசி போடுதல் வைரஸ்கள் மாறுவதையும் புதிய வகைகள் தோன்றுவதையும் தடுக்கும் என்று டாக்டர் நிகாம் கூறுகிறார். இணை நோய்த்தொற்று ஏற்பட்டால், தடுப்பூசி போடுவது “நோயின் தீவிரத்தைத் தடுக்கவும், முக்கியமான கவனிப்பு தேவைப்படவும் உதவும்” என்று விளக்குகிறார்.
மேலும், “தடுப்பூசி ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கக்கூடும், ஏனெனில் இது கடுமையான விளைவுகள் மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்கிறது. இது பல்வேறு வகையான திரிபுகளின் கவலைகளாக வெளிப்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.