மனிதனின் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த திருப்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அதற்கு காரணம் யார் என்று நாம் ஆராய்வதில்லை. ஆனால், அதுவே மோசமாக அமைந்துவிட்டால், 'சே! இப்படி நடந்து விட்டதே!', 'சே! இது கூட தெரியாமல் நாம இப்படி பண்ணிட்டோமே!' , 'சே! என்ன வாழ்க்கை டா இது!'-னு, ஆயிரம் 'சே' போட்டிருப்போம்.
ஒருவேளை, எல்லோரது வாழ்க்கையிலும் ரீ-ஸ்டார்ட்ன்னு ஒரு பட்டன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஒரு ஜாலி கற்பனை இதோ,
ஒசாமா பின் லேடன் அமெரிக்காவை நம்பியிருக்க மாட்டார்.
பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்திருக்க மாட்டார்கள்.
எல்லா ஆண்களும் பெற்றோருக்கு எப்போதும் மரியாதை கொடுத்திருப்பார்கள்.
2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், சச்சின் அவசரப்பட்டு மெக்ரத் ஓவரில் டாப் எட்ஜ் ஆகியிருக்க மாட்டார்.
ரஜினிகாந்த் 1996-லேயே அரசியலுக்கு வந்திருப்பார்.
சசிகலா கொஞ்சம் பொறுமையாக இருந்திருப்பார். முதல்வராகும் எண்ணத்தை கொஞ்சம் ஆற வைத்திருப்பார்.
'கில்லி' படத்தில் கபடிப் போட்டியில் செமி பைனலில் தோற்ற விஜய் டீம், பைனலுக்கு முன்னேறியது போன்று வைத்த சீனை டைரக்டர் தரணி மாற்றி அமைத்து இருப்பார்.
மாதவன் 'கஜினி' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பார்.
தென்னாப்பிரிக்க ரசிகர்கள், வார்னரின் மனைவி குறித்து ஆபாசமாக விமர்சிக்காமல் இருந்திருந்தால், டேவிட் வார்னர் மனதில் பந்தை சேதப்படுத்தும் அளவிற்கு வஞ்சம் ஏற்பட்டிருக்காது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், ஸ்விங் செய்வதற்கு ஏற்றவாறு பந்தை சேதப்படுத்த தீட்டிய வார்னரின் திட்டத்தை செயல்படுத்தி இருக்க மாட்டார்.
ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியிருக்க மாட்டார்.
இ.பி.எஸ்-ஐ சசிகலா முதல்வராக்கி இருக்க மாட்டார்.
மகாத்மா காந்தி பாகிஸ்தானை பிரிக்க அனுமதி தந்திருக்கமாட்டார்.
மக்கள் 'கர்மவீரர்' காமராஜரை தோற்கடித்து இருக்க மாட்டார்கள்.
பெரும்பாலான பசங்க கமிட் ஆகியிருக்கவே மாட்டாங்க.
பசங்க படிப்பின் அருமையை புரிந்து நல்லா படிச்சு இருப்பாங்க.
இவ்வளவு தான் 'காமம்' என்ற உண்மையை பசங்க உணர்ந்திருப்பாங்க.
ஜாதி, மதங்களை தோன்ற விடாமல் செய்திருக்கலாம்.
ஆதாம், ஏவாலை ஆப்பிள் திங்க விடாமல் தடுத்திருக்கலாம்.
கடவுள் மனிதனையே படைக்காமல் விட்டுருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.