வெளியேறிய தண்ணீர், தலையில் சர்ஜரி.. பிக் பாஸ் அர்ச்சனாவிற்கு என்னதான் ஆச்சு? மகள் ஜாரா பகிர்ந்த வீடியோ!

What happened to Bigg Boss Archana Zara shares a Video ஒன்று மூக்கு வழியாக டியூப் செலுத்தி ஓட்டையை அடைப்பது. மற்றொன்று தலையைப் பிரித்து ஆபரேட் செய்யவேண்டும்.

What happened to Bigg Boss Archana Zara shares a Video Tamil News
What happened to Bigg Boss Archana Zara shares a Video Tamil News

What happened to Bigg Boss Archana Zara shares a Video Tamil News : காமெடி டைம், இளமை புதுமை உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் 90’ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளையடித்தவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நகைச்சுவை உணர்வோடு தொகுத்து வழங்குவதில் கில்லாடியாக இருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்ததன் மூலம் ஏராளமான நெகட்டிவ் கமென்ட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டார். இதற்கான முழு காரணம் மற்றும் விளக்கத்தை அர்ச்சனாவின் மகள் ஜாராவும், தங்கை அனிதாவும் பகிர்ந்துகொண்டனர்.

“செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயிட் லீக் எனும் ஒருவித மூளை சம்பந்தப்பட்ட பிரச்னையால்தான் அச்சும்மா பாதிக்கப்பட்டிருக்கிறார். இதை முதலில் கண்டுபிடிக்கவே எங்களுக்கு நேரம் எடுத்தது. அச்சுமாவின் பிறந்தநாள் முடிந்து சில நாட்களில் திடீரென அதிகமான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததில், எந்த விதமான வைரல் காய்ச்சலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஒருவேளை கொரோனா காய்ச்சலாக இருக்குமோ என்று நினைத்து டெஸ்ட் செய்தோம். ஆனால், நெகட்டிவ் என்றுதான் முடிவு வந்தது. ரத்தத்தில் தோற்று இருக்குமோ என்று ரத்த சோதனை செய்தோம். அப்போதும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடுமையான தலைவலிக்கு ஒருவேளை ஏற்கெனவே இருக்கும் சைனஸ் பிரச்சனை காரணமாக இருக்குமோ என்று நினைத்தால், அதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அப்போதுதான், 45 நாட்களாக மூக்கில் இருந்து தண்ணீராக வருகிறது என்று அச்சும்மா ஒரு விஷயத்தை மருத்துவரிடம் கூறினார்.

பிறகு, மூளையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்கிற சந்தேகத்தில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தோம். அப்போதுதான் பெரிய இடி தலையில் விழுந்தது. மூளையை சுற்றி இருக்கும் டிஷ்யூவில் ஒரு பகுதியில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வழியாக மூளைப்பகுதியிலிருந்து திரவ நீர் வெளியேற ஆரம்பித்திருக்கிறது என்பதையும் கண்டறிந்தோம். இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஒன்று மூக்கு வழியாக டியூப் செலுத்தி ஓட்டையை அடைப்பது. மற்றொன்று தலையைப் பிரித்து ஆபரேட் செய்யவேண்டும்.

நல்ல வேளையாக, அச்சுமாவின் வலது தொடையிலிருந்து சிறிதளவு ஸ்கின் எடுத்து, அதனை மூக்கு வழியாக கொண்டுச் சென்று, ஓட்டையை அடைத்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவர்க்கும் நன்றி. அச்சும்மா இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவார். ஒரு மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்” என்று ஜாராவும் அனிதாவும் தங்களுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What happened to bigg boss archana zara shares a video tamil news

Next Story
ஹீமோகுளோபின், ஆக்சிஜன் அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்ஸ் இவை தான்!Immunity-boosting foods: 5 super foods that will improve your hemoglobin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com