Advertisment

குறை ஏதுமில்லை: சொந்தமாக உணவகம் நடத்தும் மன வளர்ச்சி குன்றிய பெண்

மும்பையை சேர்ந்த அதிதி, மனவளர்ச்சி குன்றியவராக இருந்தாலும் தன்னம்பிக்கை மூலம் வெற்றிகரமாக உணவகம் நடத்தி வருகிறார். ஃபைவ் ஸ்டார் உணவகம் ஆரம்பிப்பது இவர் கனவு

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
குறை ஏதுமில்லை: சொந்தமாக உணவகம் நடத்தும் மன வளர்ச்சி குன்றிய பெண்

நமக்கெல்லாம் எல்லாவற்றிலும் நல்லதே நடக்க வேண்டும். எந்த சோகமும் வந்துவிடக்கூடாது. நமக்கு கிடைக்கும் எல்லாவற்றிலும் குறைகளே மேலோங்கித் தெரியும். கிடைப்பனவற்றில் இருந்து மகிழ்ச்சியையோ, நிறையையோ எடுத்துக்கொள்ள நம்மில் பெரும்பாலானோர் மறந்துவிடுகிறோம்.

Advertisment

மற்றவர்களுடைய வாழ்க்கை எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எல்லா கஷ்டங்களும் நம்மையே தேடி நம் இருப்பிடத்தில் அமர்ந்துகொள்வதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நம்மை விட கடினமான சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக, முகத்தில் எப்போதும் சிரிப்புடனும், அவர்களிடத்தில் உள்ள நம்பிக்கையை மற்றவர்களுக்கு பரவியபடி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

உடல் அல்லது மன அளவில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாது. அப்படியே வெளிப்படுத்தினாலும், மற்றவர்கள் அதனை ஊக்கப்படுத்துவது அரிது. ஆனால், மும்பையை சேர்ந்த அதிதி வர்மா தன் நம்பிக்கை மூலம் தனது திறமையை வெளிக்கொண்டு சாதித்திருக்கிறார். அதிதி வர்மா மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். மற்றவர்களைப் போல் எல்லா விஷயங்களையும் எளிதில் செய்வது அவரால் முடியாது. ஆனால், அவரிடம் தனித்திறமை இருந்தது. அதிதி வர்மா நன்றாக சமைக்கக் கூடியவர்.

அவருடைய இந்த தனித்திறமையை அதிதியின் பெற்றோர் கண்டுகொண்டனர். அதனை ஊக்கப்படுத்தினர். அவரது திறமையை அப்படியே விட்டுவிடாமல் அவருக்கு சிறிய உணவகத்தை ஆரம்பித்து கொடுத்தனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று, மும்பையில் உள்ள பெலா பூரில் உள்ள பூமி மாலில் ‘அதிதி கார்னர்’ என்ற சிறிய ஸ்நாக்ஸ் கடையை வைத்துக் கொடுத்தனர். ஆரம்பத்தில், டீ, காஃபி, ஸ்நாக்ஸ் மட்டுமே அங்கு அதிதி விர்பனை செய்தார். ஆனால், அவரது கடின உழைப்பின் மூலம் அதனை முழு உணவகமாக மாற்றியுள்ளார். வீட்டில் தயாரிக்கப்படும் மதிய உணவுகளும் அங்கு விற்கப்படுகின்றன.

இந்த தொழிலால், அதிதி பிஸியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரை மனதளவில் வளர்த்துக்கொள்ள உதவுகிறது. உணவகத்தின் கணக்குவழக்குகளையும் அதிதிதான் நிர்வகிக்கிறார்.

உடல் அல்லது மன குறைபாட்டுள்ள குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல் சாதிக்க தகுதி பெற்றவர்கள் தான் என்கின்றனர் அதிதியின் பெற்றோர்.

அதிதிக்கு வருங்காலத்தில் ஃபைவ் ஸ்டார் உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் கனவு.

முன்னேறுங்கள் அதிதி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment