Advertisment

ஐஎம்எஃப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்! யார் இந்த கீதா கோபிநாத்?

40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
Oct 03, 2018 12:50 IST
New Update
கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்

பன்னாட்டு நிதியமான ஐஎம்எஃப்ப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐஎம்எஃப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் கூடுதல் தகவல்.

Advertisment

கோபிநாத் யார் இவர்?

ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்டின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால்  அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகராக  கீதா பொறுப்பேற்க உள்ளார்.

கீதா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும்  கீதா பெற்றுள்ளார்.

தற்போது இவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராகவும் உள்ள இவர், 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். . தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா நிறைவு செய்திருந்தார்.

அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா  2005 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார்.

இந்நிலையில் இதுக் குறித்து  ஐஎம்எஃப்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ , கீதா கோபிநாத் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர், தன்னுடைய திறமையையும், புத்திசாலித்தனத்தையும் பல்வேறு தளங்களில் நிரூபித்துள்ளார்.

பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர் கீதா  அவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக ஐஎம்எஃப்க்கு நியமிப்பதில் பெருமை கொள்கிறது. எனத் தெரிவித்துள்ளார்” .

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment