வட்ட வட்டமாக விமான ஜன்னல்... ஏன் அப்படி வச்சுருக்காங்க தெரியுமா; சிம்பிள் ரீசன் தான்!

விமானப் பயணத்தின்போது நீங்கள் கவனித்திருக்கக்கூடிய, விமானச் சன்னல்கள் வட்டமாக இருப்பதற்குப் பின்னால் ஒரு முக்கியமான பாதுகாப்பு வரலாறு உள்ளது.

விமானப் பயணத்தின்போது நீங்கள் கவனித்திருக்கக்கூடிய, விமானச் சன்னல்கள் வட்டமாக இருப்பதற்குப் பின்னால் ஒரு முக்கியமான பாதுகாப்பு வரலாறு உள்ளது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
flight doors

நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது, சன்னல்கள் எப்போதும் சதுர வடிவில் இல்லாமல், விளிம்புகளில் வட்டமாக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக் குறியின் பின்னால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த ஒரு முக்கியமான பொறியியல் மற்றும் பாதுகாப்பு வரலாறு உள்ளது. அந்த வட்ட வடிவமான ஜன்னலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று பார்ப்போம். 

Advertisment

ஆரம்பத்தில், 1950களில் தயாரிக்கப்பட்ட சில விமானங்களில் சதுர வடிவ சன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. விமானங்கள் உயரமான இடங்களுக்குப் பறக்கத் தொடங்கியபோது, ஒரு சிக்கலைச் சந்தித்தன. விமானத்தின் உள்ளே பயணிகளின் வசதிக்காகச் செயற்கை அழுத்தம் (pressurization) பராமரிக்கப்படுகிறது. இந்த உயர் அழுத்தத்தின் காரணமாக, விமானத்தின் சட்டம் (Airframe) மீது அதிக பளு ஏற்பட்டது.

சதுர வடிவ ஜன்னல்களில் இருந்த கூர்மையான மூலைகள், அழுத்தத்தின் காரணமாக ஒரு பலவீனமான புள்ளியாகச் செயல்பட்டன. இந்த மூலைகளில் அழுத்தம் குவிந்ததால், நுண்ணிய கீறல்கள் (hairline cracks) உருவாகத் தொடங்கின. இந்தக் கீறல்கள் விரிவடைந்து, இறுதியில் பல விமானங்கள் நடுவானில் உடைந்து சிதைந்தன. இந்தத் தொடர் விபத்துகளுக்குப் பிறகு, பொறியாளர்கள் ஆய்வு செய்து ஒரு சதுர மூலைகள் அழுத்தத்தை ஒரு புள்ளியில் குவித்து விடுகின்றன என்ற உண்மையை கண்டறிந்தனர்.

இந்தக் கோர விபத்துக்களைத் தவிர்க்க, பொறியாளர்கள் சன்னல்களை வட்டமாக அல்லது ஓவல் வடிவத்தில் வடிவமைக்க முடிவு செய்தனர். வட்ட அல்லது ஓவல் வடிவ சன்னல்கள், அழுத்தத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்காமல், விமானத்தின் சட்டம் முழுவதும் சமமாகப் பரப்பி விநியோகிக்கின்றன.

Advertisment
Advertisements

இதனால், வட்ட சன்னல்கள் அதிக பலம் கொண்டதாகவும், கீறல்களை ஏற்படுத்தாத பாதுகாப்பான வடிவமைப்பாகவும் இருக்கின்றன. சிறிய சன்னல்கள் அதிக வலிமையுடன், அழுத்தத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுவதால், பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சதுர ஜன்னல்கள் ஏற்படுத்திய விபத்துகளுக்குப் பிறகு, இந்த வட்ட வடிவமே விமானப் போக்குவரத்தில் ஒரு நிரந்தரப் பாதுகாப்புத் தீர்வாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை, நவீன விமானங்களில் ஒரு பாதுகாப்புப் பிரச்சனையுமின்றி வட்ட சன்னல்களே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Flight

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: