Advertisment

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? உகந்த நேரம் எது?

நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அதேபோல், நீரில் கங்காதேவியும் எழுந்தருளியுள்ளார் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

author-image
Jayakrishnan R
Oct 23, 2022 20:41 IST
Why take oil bath on Diwali day and What is the optimal time

தீபாவளி தினத்தில் சூரிய உதயத்துக்கு முன்னரும் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

தீபாவளிக்கு உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த வகையில், இக்குளியலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

ஆனால் தீபாவளி தினத்தில் சூரிய உதயத்துக்கு முன்னரும் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

ஏனெனில் நரகாசுரனை மக்கள் நினைக்க வேண்டும் என பூமாதேவி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டினாள். இந்த வரத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் அருளினாள்.

Advertisment

ஆகையால், நல்லெண்ணெயில் உடலில் தேய்த்து குளிக்கிறோம். காரணம், நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.

அதேபோல், நீரில் கங்காதேவியும் எழுந்தருளியுள்ளார் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

எனவேதான் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கின்றனர் நம் முன்னோர்.

முன்னதாக, அதிகாலையிலேயே எழுந்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் சேர்த்து காய்ப்பார்கள்.

இதனை உடம்பில் பூசிக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தொடர்ந்து தலைக்கு சிகைக்காய் பயன்படுத்துவது உத்தமம்.

மேலும், அருணோதய காலம் என்பது சூரியன் உதயத்துக்கு 48 நிமிடம் முன்புவரை உள்ள காலம் ஆகும். அந்த வகையில், காலை 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.

இந்த ஆண்டு தீபாவளியில் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் நாயுருவியை தலையை சுற்றி போட்டுவிட்டு பின்னர் குளித்து பெற்றோர், மாமனார்-மாமியார் உள்ளிட்ட பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle #Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment