குளிர் மற்றும் வறட்சி காரணமாக குளிர்காலம், பல தோல் மற்றும் முடி பிரச்சனைகளை கொண்டு வருகிறது. எனவே ஹைட்ரேட்டிங், மாய்ஸ்சரைசிங் தவிர, உங்கள் முடி மற்றும் தோல் பராமரிப்புக்கு கூடுதல் மென்மையான, அன்பான கவனிப்பை நீங்கள் கொடுக்க வேண்டும்.
ஆனால் கூந்தலைப் பொறுத்தவரை, சாதரண எண்ணெய்களை விட அற்புதமான சில விஷயங்கள் உள்ளன. அவை குளிர்காலத்தில் உங்கள் உலர்ந்த உச்சந்தலையில் ஈரப்பதத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஊட்டமளிக்கிறது.
முடி உதிர்தல், நரைத்தல் மற்றும் உச்சந்தலையில் வறட்சி போன்றவை இருந்தால், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் உங்களுக்கான சரியான ரெசிபியை பகிர்ந்துள்ளார்.
இந்த குளிர்கால ஸ்பெஷல் ஹேர் ஆயிலை வீட்டில் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
செம்பருத்தி மலர்கள்- 20
வேப்ப இலைகள்- 30
கறிவேப்பிலை- 30
சின்ன வெங்காயம்- 5
வெந்தயம்- 1 தேக்கரண்டி
கற்றாழை- 1 இலை
மல்லிகைப் பூக்கள்- 15-20
தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
செய்முறை
வெந்தயத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.
இதை ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும்.
எண்ணெய் பச்சை நிறமாக மாறும் வரை 30-45 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும். அதை குளிரவிடவும்.
வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
அழகான, நீளமான, அடர்த்தியான, கருகரு கூந்தலுக்கு இந்த ஹேர் ஆயிலை கண்டிப்பா டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“