Advertisment

இப்போ இதுதான் டிரெண்ட்: குளிர்காலத்தில் பளபளப்பான முகத்துக்கு 'ஸ்கின் ஸ்லக்கிங்'

பெரும்பாலானோர் இந்த நுட்பத்தை தங்கள் இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தின் இறுதிப் படியாகப் பயன்படுத்துகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Skin Slugging

Winter Skincare

எப்போதும் வளர்ந்து வரும் சருமப் பராமரிப்பில் இப்போது ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது. இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும் என்று உறுதியளிக்கிறது.

Advertisment

ஸ்கின் ஸ்லக்கிங் - இது முதலில் விசித்திரமாகத் தோன்றினாலும், அடுத்த பெரிய விஷயத்தைத் தேடும் அழகு ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்கின் ஸ்லக்கிங் ஒரு தோல் பராமரிப்பு நுட்பமாகும், இது உங்கள் முகத்தில் ஒரு திக் லேயர் மாய்ஸ்சரைசர் தடவுவது மூலம், ஈரப்பதத்தை லாக் செய்யும் ஒரு தடையை உருவாக்குவது ஆகும்.

ஸ்கின் ஸ்லக்கிங் என்றால் என்ன, அதை எப்படி செய்வது?

தோல் மருத்துவரும், அழகு நிபுணருமான டாக்டர் அஸ்மிதா தேக்னே செப்பியின் கூற்றுப்படி, ஸ்கின் ஸ்லக்கிங் என்பது முகத்தில் ஒரு திக் லேயர் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது, இதில் பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லி அல்லது அதுபோன்று ஒன்று இருக்கும்.

விரும்பிய ஸ்லக்கிங் விளைவை அடைய, சுத்தமான முகத்துடன் தொடங்கவும். தாராளமாக மாய்ஸ்சரைசர் எடுத்து உங்கள் முகத்தில் சமமாகப் பயன்படுத்துங்கள். பெரும்பாலானோர் இந்த நுட்பத்தை தங்கள் இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தின் இறுதிப் படியாகப் பயன்படுத்துகிறார்கள், என்று அவர் கூறினார்.

பயன்கள்

facial

ஸ்கின் ஸ்லக்கிங் முடிவுகள், நபருக்கு நபர் மாறுபடும். தோல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சீமா ஓபராய் லால் கருத்துப்படி, அதன் சாத்தியமான சில நன்மைகள் இங்கே:

வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது

ஸ்லக்கிங், டிரான்ஸ் எபிடெர்மல் நீர் இழப்பை (TEWL) தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும், இது தோலில் இருந்து நீர் ஆவியாகும் செயல்முறையாகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது குறிப்பாக நன்மை பயக்கும், ஹைட்ரேஷன் மற்றும் நெகிழ்ச்சியை உறுதி செய்கிறது.

தோலின் அமைப்பை மேம்படுத்துகிறது

ஸ்லக்கிங் தோல் அமைப்பை மேம்படுத்தி, மென்மையாக மாற்றும். மாய்ஸ்சரைசர் ஈரப்பதத்தை லாக் செய்கிறது. இதனால் முகம் பார்க்க பளபளப்பாக இருக்கும்.

பாதுகாப்பு

மாசுபாடு மற்றும் கடுமையான வானிலை போன்ற சுற்றுச்சூழலுக்கு எதிராக ஸ்லக்கிங் ஒரு கேடயமாக செயல்படுகிறது. மாய்ஸ்சரைசர் சருமத்தில் ஒரு தடையை உருவாக்கி, எரிச்சலிலிருந்து பாதுகாக்கிறது.

சேதமடைந்த சருமத்தை குணப்படுத்துகிறது

ஸ்லக்கிங் சேதமடைந்த சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வதன் மூலம் குணப்படுத்த உதவுகிறது, அது தன்னைத்தானே சரிசெய்ய அனுமதிக்கிறது. அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் சில தோல் பராமரிப்பு நிபுணர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இது அனைவருக்கும் பொருந்தாது என்று டாக்டர் லால் குறிப்பிட்டார். முகப்பரு பாதிப்பு அல்லது எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு ஸ்கின் ஸ்லக்கிங் அவர்களின் நிலையை மோசமாக்குவதைக் காணலாம். சருமத்தில் எண்ணெய் மற்றும் அழுக்குகளை சிக்க வைக்கலாம், இது துளைகள் மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு தோல் எரிச்சல் ஏற்படலாம், குறிப்பாக சென்சிட்டிவ் சருமம் இருந்தால்,  என்று அவர் விளக்கினார்.

உங்கள் தோல் வகைக்கு கவனம் செலுத்துவது மற்றும் அதற்கேற்ப தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எந்தவொரு ஸ்கின் கேர் டிரெண்ட் போலவே, தயாரிப்புகளை பேட்ச்-டெஸ்ட் செய்து, தோல் மருத்துவரை அணுகுவது நல்லது, குறிப்பாக சென்சிட்டிவ் அல்லது பிரச்சனையுள்ள சருமம் உள்ளவர்கள், என்று டாக்டர் செப்பி முடித்தார்.

Read in English: Is ‘skin slugging’ the secret to glowing, hydrated skin during winters?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment