தினமும் அல்லது அடிக்கடி அதிக இனிப்பு கலந்த குளிர் பானங்கள், காப்பி, டீ உள்பட எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு கல்லீரல் புற்று நோய் அல்லது மோசமான ஹெபாடிடிஸ் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது 1 லட்சம் மாதவிடாய் நின்றுபோன பெண்களிடம் செய்யப்பட்டது. இதை ப்ரிஹம் மற்றும் பெண்கள் மருத்துவமனை (Brigham and Women’s Hospital) சேர்ந்த ஆய்வாளர்களை செய்துள்ளனர். கிட்டதட்ட 20 வருடங்கள் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.
அதிக சர்க்கரை சேர்த்த குளிர் பானத்தை எடுத்துகொள்வதற்கும் கல்லீரல் பாதிப்புக்கும் இருக்கும் தொடர்பை இந்த ஆய்வு ஆராய்ச்சி செய்கிறது.
இந்நிலையில் தினம் தோறும் ஒரு முறை அல்லது பல முறை சர்க்கரை அதிகம் உள்ள குளிர் பானங்களை குடிக்கும்போது இது உடல் எடை அதிகரிப்பது, சர்க்கரை, புற்று நோய், கல்லீரல் சேதமடைவது, ஜீரண பிரச்சனை, எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் 5 மோசமான விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதிக சிக்கல் உள்ள கர்ப்ப காலம் ஏற்படும். கரு உருவாவதில் சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை இல்லாத பானங்களில் செயற்கையான சர்க்கரை கலப்பான் சேர்க்கப்படும். அதில் உள்ள ஆஸ்பர்டமே ( aspartame) புற்று நோய் போன்ற மெட்டபாலிக் நோய்களை ஏற்படுத்தும்.
தினமும் சோடா குடிக்கும் பெண்களுக்கு, கல்லீரல் புற்று நோய், ஹெபடைடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுவத்துவதால் இது நடைபெறுகிறது.
வேகமாக வயதாவது. இதுவும் ஒரு முக்கிய விளைவாக உள்ளது. தினமும் 20 அவுன்ஸ் சோடா குடிக்கும் பெண்களுக்கு 4 ½ வயது வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதிகமாக சோடா குடித்தால், சிரம் பொட்டாஷியம் நமது உடலில் குறைந்துவிடும். இதனால் இதய நோய் ஏற்படும். மேலும் இதனால் யூரிக் ஆசிட் அதிகமாகி கீழ்வாதம் ஏற்படும். முட்டிகளில் வலி ஏற்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“