உலகக் கோப்பை கால்பந்து: கோல் நேரத்தை கணித்த புதுக்கோட்டை பைலட்டுக்கு குவியும் பாராட்டுகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோல் விழும் நேரத்தை சரியாக கணக்கிட்டு தமது முகநூலில் வெளியிட்டிருந்த புதுக்கோட்டை பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோல் விழும் நேரத்தை சரியாக கணக்கிட்டு தமது முகநூலில் வெளியிட்டிருந்த புதுக்கோட்டை பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோல்கள் போடும் நேரத்தை முன்கூட்டியே சரியாக கணித்த புதுக்கோட்டையை சேர்ந்த பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்றாலே, அதில் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நடைபெற்றது இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியும். எந்த அணிகள் அரை இறுதிக்குச் செல்லும், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது தொடர்பாக பலர் தங்களது ஆருடங்களை முன்கூட்டியே பதிவிட்டு வந்தனர்.
இதில் காலக் கணித ஆய்வாளரும், பைலட்டுமான கணேஷ்குமார் வெளியிட்ட கணிப்புதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மச்சுவாடி ராம் நகர் 2-ம் வீதியைச் சேர்ந்த சீதாராமனின் மகனான கணேஷ்குமார் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக காலக் கணிதம் பயின்று வருபவர். ஜோதிட அறிவியல் தொடர்பாக பி.எச்.டி படிக்கக்கூடிய பலருக்கு வழிகாட்டியாகவும் உள்ளார்.
Advertisment
Advertisements
விபத்து, நிலநடுக்கம், புயல், தீ விபத்து, விளையாட்டு, அரசியல் மாற்றங்கள் போன்றவை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கணித்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிடுவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், நேற்று நடந்த கால்பந்து இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 40 நிமிடங்கள் முன்னதாக இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில், சரியாக இந்திய நேரப்படி, 20:48-20:55 க்குள் முதல் கோல் விழும் என்றும், 21:06 -21:08 இரண்டாவது கோல் விழும் என்றும் கணித்து இருந்தார். இதன்படி 20:53 இல் முதல் கோலும் துல்லியமாக 21:06-க்கு இரண்டாவது கோலும் விழுந்தது. உலகமே உற்று நோக்கக்கூடிய ஒரு ஆட்டத்தின் முக்கிய தருணங்களை, முன்கூட்டியே கணித்தது குறித்து வியப்படைந்த பலர், கணேஷ்குமாரை சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "ஜோதிடம் என்பது அறிவியலுக்கும் மேம்பட்ட ஒரு சக்தி. இதன்மூலம் எந்த விஷயத்தையும் துல்லியமாக முன்கூட்டியே குறிப்பிட முடியும் என்பது இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தமிழரின் வானியல் சாஸ்திரத்துக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
உலகமே அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடி வருவதுபோல், உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோல் விழும் நேரத்தை சரியாக கணக்கிட்டு தமது முகநூலில் வெளியிட்டிருந்த புதுக்கோட்டை பைலட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்றால் அது மிகையல்ல. பைலட்டை வாழ்த்த நினைத்தால் 94433 32722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“