/indian-express-tamil/media/media_files/2025/10/12/mananalam-2025-10-12-14-43-13.jpg)
உலக மனநல தினத்தை முன்னிட்டு (தனியார்) கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநலம் பற்றிய சொற்பொழிவு மற்றும் மனநலப் பயிற்சி உலக சாதனை முயற்சியாக நடைபெற்றது. மாணவர்களின் மனநலம் சார்ந்த மனஅழுத்த மேலாண்மை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை மனநிலை, தலைமைத்துவ திறன், உளவியல் நல்வாழ்வு உள்ளிட்ட 13 தலைப்புகளில் பயிற்சியும் சொற்பொழிவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மனநலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உளவியல் வலிமையை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டது. நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மருத்துவ உளவியல் நிபுணர்கள் பாபு ரங்கராஜன் மற்றும் ரோஜா ரமணி ஆகியோர் கூறியதாவது, உலகளவில் எட்டு நபர்களில் ஒருவர் மனநல பாதிப்புடன் உள்ளார் என கூறப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என வேறுபாடின்றி எவரையும் பாதிக்கக்கூடியவை.
பதட்டம், மிகை அச்சம், மனச்சோர்வு போன்றவை பொதுவாகக் காணப்படும் மனநலக் குறைகள். மாணவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானால் சிறப்பாக செயல்பட முடியாது. போதுமான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மூலம் நல்ல மனநலத்தைப் பெற முடியும். இது அவர்களுக்கு வாழ்க்கைச் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவும். உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலனும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.