ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன், இலக்கிய உலகில் சில பெண் ஆளுமைகள் அவருக்கு மிக நெருங்கிய தோழியராக இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் இந்துமதி.
இந்நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் எழுத்தாளர் இந்துமதியுடன் நடத்திய நேர்காணல் இப்போது வைரல் ஆகியுள்ளது.
இதில், தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளான கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா , வி.என். ஜானகி ஆகியோருடன் அவருக்கிருந்த நெருங்கிய தொடர்புகளை இந்நேர்காணல் போது இந்துமதி பகிர்ந்து கொண்டார்.
ஜெயலலிதாவுடன் தன்னுடைய நினைவலைகள் குறித்து மனம் திறந்த அவர்,
“ஜெயலலிதா ஒரு சிங்கம், நான் பார்த்த ஜெயலலிதா ரொம்ப அப்பாவி, காத்துல ஆடுன அறுந்து போற மெல்லிய தங்கத்த கூட போடமாட்டாங்க, ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவுங்களுக்கு கிடைக்கக் கூடிய வைர நகைகளை எல்லாம் என்கிட்ட காட்டுவாங்க. ஆனா, அதெல்லாம் அவுங்க போட்டு நான் பாத்தது இல்ல. அப்படிபட்டவங்க உடம்பு முழுக்க நகை போட்டு இருக்கிறது பாத்தப்போ நான் பாத்த ஜெயலலிதாவா இதுன்னு நினைச்சிருக்கேன்.
ஒருமுறை கலைஞரை கைது செய்து, அவர் அப்பல்லோ மருத்துவமனையில இருந்தாரு. நான் போய் பாக்கிறேன். அப்போ அடிபட்ட இடத்தை எல்லாம் கலைஞர் என்கிட்ட காட்டினாரு.
நான் அங்க இருந்து நேரா போயஸ்கார்டன் வந்தேன்.
ஜெயலலிதா நீ எங்க போயிட்டு வர்றனு எனக்கு தெரியும் சொன்னாங்க..
அங்கதான் போயிட்டு வர்றேன், நீங்க செய்ஞ்சது நல்லா இருக்கா, இப்படி செய்யலாமா? அவர் இதய நோயாளினு தெரியும்ல. அப்படி அவரைத் தூக்கி பந்தாடலாமான்னு அவங்களை பார்த்து கேட்டேன்.
அவங்க என்னை அப்படியே பார்த்தாங்க.
நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும், இதுக்கு அப்புறம் நான் உங்களை பாக்க போறதில்லன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
ஜெ.க்கு என்னை ரொம்ப பிடிக்கும், எனக்கும் அவுங்களை ரொம்ப பிடிக்கும். கலைஞரையும் பிடிக்கும். எம்ஜிஆரையும் பிடிக்கும்.
ஜானகி அம்மாகிட்டயும் நெருக்கமா இருந்துருக்கேன். அவுங்க என் தலையில நானே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்னு என்கிட்ட நிறைய அழுதுருக்காங்க. இப்படி பல விஷயங்களை எழுத்தாளர் இந்துமதி அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“