கேரளாவில் பிறந்த நக்ஷத்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
அதன் பிறகு நக்ஷத்திரா, கலர்ஸ் டிவியில் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பிறகு, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். விஷ்வா ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட், மற்றும் ஜீ தமிழ் டி.வி. சீரியல்களின் எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசராகவும் உள்ளார்.
சமீபத்தில் நக்ஷத்திராவின் தோழி சைத்ராவின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று வைரல் ஆகியது.

அந்த போஸ்ட்டில், ’நக்ஷத்திரா வயிற்றில் காது வைத்து கேட்பது போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சைத்ரா அதில், எங்கள் 4 பேரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தோம். நக்ஷ்த்திரா கர்ப்பமாக இருக்கிறார் என்பது எங்கள் அனைவருக்கும் ஒரு பூரிப்பான செய்தி. என் சிறந்த தோழி தனது குழந்தையை வயிற்றில் சுமப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜூனியர் நக்ஷு வெளியே வந்து எங்களைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறேன்’ என்று உணர்வு பொங்க பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நக்ஷத்திராவுக்கு இப்போது 5 மாதங்கள் ஆனதை முன்னிட்டு அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுத்த வீடியோவை நக்ஷத்திரா தனது Nakshathra’s Diary யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.





இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், ஸ்ரீநிதி உள்பட சீரியல் பிரப்லங்கள் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“