கம்மி பட்ஜெட்டில் டக்கரான ஃபோட்டோ ஷூட்! களம் இறங்கியுள்ள இளைஞர்கள்.

குடும்பத்தின் சூழ்நிலைக்காக பலரின் கனவுகள் சிதைந்ததுண்டு.தனது குடும்பம் மற்றும் கனவையும் பாதிப்பின்றி கவனிப்பவர்களைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம்.

By: Updated: April 10, 2018, 05:08:19 PM

சென்னை புறநகர் பகுதியில் நளினி மற்றும் சூர்யா வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது தனியார் அலுவலகத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். என்னதான் ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்த்தாலும் இவர்களின் பேரார்வம் அனைத்தும் புகைப்படம் எடுப்பதில் தான் உள்ளது.

சென்னை மீனாட்சி கல்லூரியில், கணிதம் பட்டம் பயின்றவர் நளினி மற்றும் சூர்யா என்ற மற்றொரு நிறுவனர் சாய் ராம் பொறியியல் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்தவர். இருவரும் பட்டப்படிப்பிற்கு பிறகு தனியார் அலுவகத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்தவர்கள். நீண்ட நாட்களாகப் புகைப்படம் சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். புகைப்படம் கலையில் வாய்ப்புகள் தேடி வருவதற்கு முன்னர், இருவரும் இணைந்து குறும்படங்கள் தயாரிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். இந்தத் துறையில் மேலும் அறிவாற்றல் பெற இருவரும் இணைந்து பல்வேறு ஆன்லைன் பயிற்சிகளும் எடுத்துள்ளனர்.

இவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நடத்திய கலந்துரையாடல் உங்களுக்காக:

ஏன் புகைப்படத்துறையில் தொழில் துவங்கினீர்கள்?

Ziddy Photo graphy

சூர்யா மற்றும் எனக்கு என்றுமே புகைப்படம் எடுப்பதில் அளவு கடந்த ஆர்வம் உண்டு. தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் வேளையில், பார்ட் டைம்-ல் ஒரு பிராஜெக்ட் தொடங்க முடிவு செய்தோம். அப்போது என்ன வேலைத் தொடங்கலாம், எவ்வளவு முதலீடு போட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு ஃபோட்டோகிராபி பிஸினஸ் தொடங்குவது தான் சரி என்ற முடிவுக்கு வந்தோம். ஏனெனில், இருவருக்கும் ஃபோட்டோகிராபி என்றாலே கொள்ள பிரியம். முதலீட்டுக்குப் பெரிதாக ஒன்றும் தேவைப்படாது. எங்களிடமே கேமரா இருந்தது. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே ஒரு முகநூல் பக்கம் தொடங்கினோம். அதற்கு “Ziddy Photography” என்று பெயர் சூட்டினோம். அதில் நாங்கள் 2016 வரை எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் அப்லோட் செய்தோம். அதன் மூலமே எங்கள் பிஸினஸ் அடுத்தகட்ட வேளைகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்தோம்.

உங்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு என்ன? அதன் பிறகு எவ்வாறு உங்கள் தொழில் முன்னேறியது?

பிப்ரவரி 2016ல் நாங்கள் முகநூல் பக்கம் தொடங்கிய பின் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினோம். இதன் மூலம் எங்களின் நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் “Ziddy Photography” என்று தொழில் துவங்கியது தெரிய வந்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் எங்களின் நண்பர்கள் அனைவருமே எங்களுக்குத் துணையாக நின்றனர். நெருங்கிய நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். இதன் மூலமாகத் தான் எங்களுக்கு முதல் பிராஜெக்ட் கிடைத்தது.

எங்களின் முதல் பிராஜெக்ட் ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளை புகைப்படம் பிடிப்பதில் துவங்கியது. எனது தோழி அவளின் குழந்தைக்கு ஒரு வயது ஆவதால் புகைப்படக் கலைஞர்களை தேடும் பணியில் இருந்தால். அப்போது எங்களின் நிறுவனம் பற்றி அறிந்து அவள் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கான ஃபோட்டோகிராபர் பிராஜெக்ட்டை எங்களுக்குக் கொடுத்தாள். அதுதான் முதன் முதலில் இந்தத் தொழிலில் கால் பதித்த நிகழ்வு.
அதன் பிறகு அதே நாள் ஒரு பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா படம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு பிராஜெக்ட்களும் எங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையில் கொடுத்தார்கள். பின்னர் நாங்கள் எடுத்த புகைப்படம், ஆல்பம் பார்த்து மிகுந்த திருப்தி அடைந்தனர். அதன் பிறகு எங்களுக்கு நிறைய பிராஜெக்டுகள் வரத் தொடங்கியது. 2016 முதல் இந்த ஆண்டு வரை 80க்கும் மேற்பட்ட பிராஜெக்டுகள் எடுத்து வெற்றியாக முடித்துள்ளோம்.

என்னென்ன புகைப்பட ஷூட் எடுப்பீங்க? எவ்வளவு தொகையில் இருந்து எடுப்பீங்க?

1. பேபி ஷூட்

Baby cake shoot

இந்த பேபி ஷூட் என்பது குழந்தைகளை மட்டும் புகைப்படம் எடுப்பது. இந்த பிராஜெக்ட்டில் எங்களின் மாடல் அந்தக் குழந்தை தான். 5 ஆயிரம் முதல் இதன் பட்ஜெட் துவங்குகிறது. ஒரு நாள் அவுட்டோர் ஷூட்டில் பெற்றோர்களில் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் குழந்தைகளை ஃபோட்டோ எடுப்போம். குழந்தைகளை ஃபோட்டோ எடுப்பது எங்களுக்குப் பிடித்த ஒன்று. குழந்தைகள் குறும்பு செய்வது, அழுவது, சிரிப்பது என அனைத்து உணர்வுகளை ஃபோட்டோ எடுப்போம். பின்னர் கேக் ஸ்மேஷ் “cake smash” என்று ஒரு ஃபோட்டோ எடுப்போம். அதில் குழந்தைக்கு முன்பு ஒரு முழு கேக்கை வைத்து விடுவோம். குழந்தைகள் அந்த கேக் எடுத்துச் சாப்பிட்டு உடல் முழுவதும் அப்பிக்கொள்ளும் அனைத்தையும் ஃபோட்டோ எடுப்போம். பார்க்கவே கியூட்டாக இருக்கும்.

2. மெடர்னிட்டி ஷூட் (கற்பக்கால ஷூட்)

Maternity shoot

பேபி ஷூட் ஒருவகையில் ஸ்பெஷல் என்றால், மெடர்னிட்டி ஷூட் இன்னும் ஸ்பெஷல். ஒரு பெண் கற்ப நிலையில் இருக்கும் நேரம் அவர்கள் கடந்து வரும் பாதை எளிதல்ல. ஆனால் கருவை சுமப்பதில் இருக்கும் அழகை தற்போதுள்ள பெரும்பாலான பெண்கள் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். இந்த மெடர்னிட்டி ஷூட்டில் கற்பமாக இருக்கும் பெண்கள் அழகாக மேக் அப் போட்டு ஃபோட்டோ எடுப்போம். இதில் எடுக்கும் ஒவ்வொரு ஃபோட்டோவும் பிற்காலத்தின் அழகான நினைவுச் சின்னமாக மாறும். இந்த ஃபோட்டோ ஷூட்டும் 5 ஆயிரத்தில் இருந்து அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொடங்குகிறது.

3. மாடலெங்க் ஷூட்

Modelling shoot

மாடலிங்க் ஷூட் எல்லாம் எடுக்க இளம்பெண்களிடம் ஆசை அதிகமாக இருக்கும். ஆனால் செலவை நினைத்து மிகவும் அஞ்சுவார்கள். எங்களிடம் அந்த அச்சம் இருக்காது. பொதுவாக 10 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும் இந்த வகை ஷூட்டை நாங்கள் 5 ஆயிரத்தில் இருந்தே செய்கிறோம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த ஷூட்டிங் நாங்கள் நடத்துகிறோம். செலவைப் பற்றி கவலையில்லாமல் தங்களின் ஆசையைத் தீர்த்துக்கொள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையும் கூட.

இது மட்டுமின்றி கல்யாணத்திற்கு முன் ஜோடிகள் எடுத்துக்கொள்ள ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்துவோம். மேக் அப் உட்பட அனைத்து ஏற்பாடுகளுடன் 8 ஆயிரத்தில் தொடங்கும். இதே போல திருமணங்களை நாங்கள் ஃபோட்டோ விடியோ பிராஜெக்ட்டாக எடுத்து நடத்துகிறோம். 70 ஆயிரத்தில் இருந்து அதன் பட்ஜெட் துவங்குகிறது.

இது போன்று பிராஜெக்டுகளை நீங்கள் சிறப்பாக செய்து வருகிறீர்கள். எதிர்காலத்தில் மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இது வரை அனைத்து விதமான சூட்டிங்க் பிராஜெக்ட்டுகள் நடத்தி வருகிறோம். இனி வரும் காலத்தில் இதையே எப்படி வித்தியாசமாகச் செய்வது என்று யோசித்து முடிவெடுத்து வருகிறோம். மேலும் விரைவில் எங்களுக்கென்று ஒரு முறையான நிறுவன அலுவலகம் துவங்கி புகைப்படத்தில் ஆர்வம் அதிகம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வருங்காலத்தில் அது குறித்து தீவிரமாக யோசித்து களத்தில் இறங்க வேண்டும்.

(கேள்வி பதில் நிறைவு)

சென்னையில் ஃபோட்டோ ஷூட் என்றாலே பட்ஜெட்டை நினைத்து பதறிப் போகும் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பை “Ziddy Photography” வழங்குகிறது. நளினி மற்றும் சூர்யா எடுத்திருக்கும் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Youngsters initiative to offer best shoot at reasonable price

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X