20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.
சமீபத்தில் சாரா தனது 16வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அர்ச்சனா இன்ஸ்டாகிராமில், தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் எழுதிய பதிவில்,எனது வலிமையான மற்றும் தைரியமான கோலுவுக்கு,
இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே!!
16வது பிறந்தநாள் என்பது, இளம் வயதின் முதல் மைல்கல் என்கிறார்கள்.
வீடு, குடும்பம் மற்றும் நம் உலகில் உள்ள எல்லாவற்றின் முடிவுகளிலும் நீ எப்போதும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறாய் !! இனி, நீ தனியாக சில பெரிய முடிவுகளை எடுப்பாய் !!
உன் முதிர்ச்சி அரிதானது, அதை நீ தொடர்ந்து செய்தால் பெருமையாக இருக்கும்!
நான் 16 வயதில் எவ்வளவு அப்பாவியாக இருந்தேன் என்று பார்க்கும்போது, இன்று உன்னைப் பார்க்கும்போது, நான் ஒரு இளம் தைரியமான பெண்ணை வளர்த்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது!!
என் அன்பே எப்போதும் சிரித்துக் கொண்டே இரு!தொடர்ந்து முன்னேறு…
அம்மா எப்போதும் உன் அருகில் இருப்பாள்!!
ஐ லவ் யூ! ஹேப்பி 16 ஜாரா .. என் எல்லாம் !
இவ்வாறு அர்ச்சனா உணர்ச்சி பொங்க சாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதேபோல சாராவும் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“