90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்: காமெடி டைம் அர்ச்சனா

ஸ்வர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

By: April 11, 2020, 2:37:39 PM

VJ Archana : தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக, பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மகள் பெயரில் அம்மாவுக்கு அன்பு காணிக்கை செலுத்திய ராதிகாவின் மகள்!

அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ’கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

 

View this post on Instagram

 

Throwback pic.. Zaara’s fourth bday.. this was in May 2011..

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார். அதோடு, 2015 ஆம் ஆண்டு வெளியான ’என் வழி தனி வழி’, ’வைகை எக்ஸ்பிரஸ்’, ’ஏண்டா தலைக்கு எண்ண வெக்கல’ போன்ற படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Merry Xmas folks!! May Santa bless our lives with joy forever!! ❤️❤️

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

’அம்மா பாராட்டல, ஆனா ரசிகர்கள் விருது கொடுத்தாங்க’ : ‘ரோஜா’ வில்லி

ஜீ குடும்பம் விருதுகள், ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் போன்ற பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இன்றும் பல ஆங்கர்களுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனது மகள் ஸ்ராவுடன் இணைந்து, ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தற்போது ஸ்ரா படத்தில் நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். படு பிஸியாக இருக்கும் அர்ச்சனாவுக்கு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது தான் மிகவும் பிடித்த விஷயமாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Zee tamil anchor archana tamil television news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X