Advertisment

ஆக்டர், தயாரிப்பாளர், பெட் லவ்வர்.. நீதானே எந்தன் பொன்வசந்தம் மீரா பர்சனல் ப்ரொஃபைல்!

Zee Tamil Actress: 2013ல் முதன் முதலில் சன்டிவியின் செல்லக்கிளி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

author-image
WebDesk
Jul 13, 2021 18:06 IST
nivashini divya

ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியலான நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடரில் நடித்து வருகிறார் மீரா. இவரது பெயர் நிவாஷினி திவ்யா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். படிப்பை முடித்து 2013ல் முதன் முதலில் சன்டிவியின் செல்லக்கிளி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக யாழினி என்ற சீரியலில் நடித்தார். பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான மரகத வீணை தொடரிலும் துணை நடிகையாக நடித்து நல்ல ரீச் ஆனார். பிறகு மூன்று வருடங்கள் எந்த சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் சீரியல் மூலம் என்ட்ரி ஆனார்.

Advertisment
publive-image

தற்போது நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் மீரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஹீரோ சூர்ய பிரகாஷை உருகி உருகி ஒரு தலையாக காதலிக்கிறார். அனுவின் காதல் தெரிந்ததும் வில்லியாக மாறியுள்ளார். இந்த தொடரில் ஹீரோவின் PA வாக நடிக்கிறார். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார் நிவாஷினி. எஸ்டெல் என்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனமும், இவரும் இணைந்துதான் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலை தயாரிக்கின்றனர். நடிகை தேவையானி நடித்து வரும் புது புது அர்த்தங்கள் தொடரின் நிர்வாக தயாரிப்பாளராகவும் உள்ளார்.

publive-image

நீதானே எந்தன் பொன்வசந்தம் அதிக செலவில் சீரியல் நல்ல டிஆர்பியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகம் செலவில் இந்த தொடரின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டு வரும் நிவாஸினிக்கு நாய் என்றால் அவ்வளவு பிரியம். நாய் மட்டுமல்ல வீட்டு விலங்குகள் வளர்ப்பது இவருக்கு பிடித்த ஒன்று. ரொம்பவே கேர் எடுத்து பார்த்துக்கொள்வாராம். அந்த நாய்களை வைத்தும் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

publive-image

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். சூட்டிங் டைமில் செய்யும் ரகளைகளை அப்லோட் செய்து ரசிகர்களை என்டர்டெயின் பண்ணி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Neethane Enthan Ponvasantham
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment