மாடல், பாக்சர், ஆக்டர்… ஜீ தமிழ் சீரியல் ராஜமகள் ஐரா அகர்வால் பர்சனல் ப்ரொஃபைல்..

சின்னத்திரையில் முதல் அறிமுகம் 2017ஆம் ஆண்டு சன்டிவியின் கங்கா சீரியலில் மஹிமா என்ற கேரக்டரில் நடித்து ரீச் ஆனார்.

ராஜா மகள் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வருபவர் ஐரா அகர்வால். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். Miss South India fashion pageant in 2015 வின்னர். இதன் மூலம் ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு வாடு வீடு ஓ கல்பனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதில் அவர்தான ஹீரோயினாக நடித்தார். தமிழில் 2018ல் காட்டு பய சார் இந்த காளி மற்றும் தாயம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் முதல் அறிமுகம் 2017ஆம் ஆண்டு சன்டிவியின் கங்கா சீரியலில் மஹிமா என்ற கேரக்டரில் நடித்து ரீச் ஆனார். பிறகு கண்மணி சீரியலில் வானதியாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார். அதன்பிறகு விஜய் டிவி-யின் கடைக்குட்டி சிங்கத்தில் வாய்ப்பு தேடி வந்தது. அதில் ஒப்பந்தமாகியிருந்த ஷிவானி நாராயணன் சொந்தக் காரணங்களுக்காக விலகிக் கொள்ள, கடைசி நிமிடத்தில் ஜாக்பாட் அடித்து இணைந்தார் ஐரா அகர்வால். அந்த சீரியலில் மீனாக்ஷி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜமகள் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐரா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ளார்.

ஐரா தீவிர ரஜினி ரசிகை. எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வது இவரது சக்ஸஸ்க்கு முக்கிய காரணம். ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தும் இவர் தினமும் ஜிம்முக்கு போவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2020ஆம் ஆண்டு ஜீ குடும்ப விருதுகள் 2020ல் Rising Star of Zee Tamil விருது வென்றார். இவர் கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக குத்துச்சண்டையில் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். தனது பாக்ஸிங் பயிற்சி வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட் இன்ஸடா ரீல்ஸ், ஃபோட்டோ ஷூட் என பதிவிட்டு ரசிகர்களிடையே வைரலாக்கி வருகிறார். வெள்ளித்திரையில் நல்ல கதையில் அமைந்தால் நடிக்க ஆவலாக உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil rajamagal serial thulasi iraa agarwal biography

Next Story
‘நாங்கெல்லாம் வாயிலேயே சீமாறு வெச்சு சுத்துவோம்’ – மணிமேகலையின் சென்னை ஸ்லாங் அட்ராசிட்டிஸ்!Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Videos Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com