ஸும்பா, டான்ஸ் தெரிஞ்சவங்க மட்டும்தான் பண்ண முடியும் ஒரு தப்பான எண்ணம் இருக்கு. ஆனா அப்படி இல்ல, இது ஒரு ஃபிட்னெஸ் புரொகிராம். அடிப்படை நடன அறிவு இருக்கிறவங்க கூட ஸும்பா முயற்சி பண்ணா கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க. இப்போ இந்தியாவுல ஸும்பா நிறைய வளர்ந்துட்டு வருது என்கிறார் ஸும்பா பயிற்சியாளரான லக்ஷ்மி ரவி.
Advertisment
DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லக்ஷ்மி ரவி ஸும்பா பயிற்சி குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
என்னோட பிரெக்னென்சி அப்புறம் என்னோட பாடி ஷேப் முழுசா மாறிடுச்சு. தன்னம்பிக்கை இல்லாம இருந்தேன். அப்போ நம்ம ஏதாவது வொர்க் அவுட் இல்ல ஏதாவது ஒரு எக்ஸர்சைஸ் பண்ணி கொஞ்சம் உடம்பு குறைக்கலாம் நினைச்சேன். நான் ஏரோபிக்ஸ் தான் முதல்ல பண்ணேன். அப்போதான் எனக்கு ஸும்பா பத்தி தெரியவந்தது.
நான் இப்போ ஒரு சான்றிதழ் பெற்ற ஸும்பா பயிற்சியாளர். இது ரொம்ப எளிமையானது. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஸும்பா பயிற்சியாளர் ஆகணும்னா உங்களுக்கு முதல்ல அதுல ஒரு ஆர்வம் இருக்கணும். உங்களால முடியும் நம்பிக்கை உங்களுக்கு இருந்தா www.zumba.com லாக் இன் பண்ணுங்க. அதுல ரெஜிஸ்டர் பண்ணுங்க. உங்க பக்கத்துல, எங்கே ஸும்பா டிரெயினிங் இருக்குதுனு நிறைய ஆப்ஷன்ஸ் இங்க இருக்கும். நீங்க உங்களோட வசதிக்கு ஏத்தமாதிரி ஏதாவது ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஸும்பா தான் இப்போ என்னோட அடையாளம். இதுல நிறைய வாய்ப்புகள் இருக்கு. கார்பிரேட் ஈவ்ண்ட்ஸ், நிறைய ஷோ பண்ணலாம்.
ஒரு சான்றிதழ் பெற்ற ஸூம்பா டிரெயினரா இருந்தா குறைந்தது 15 ஆயிரம் ரூபாயில இருந்து, அதிகமாவே நீங்க சம்பாதிக்கலாம். ஸூம்பா என் வாழ்க்கையில நிறைய விஷயங்களை மாத்திருக்கு. இது வெறும் பிஸ்னஸ் மட்டும் இல்ல. இது ஒரு சமூகத்தையும் கண்டிப்பா மாத்தும், என பல விஷயங்களை லக்ஷ்மி ரவி பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“