Advertisment

புகலற்ற பாழ்நிலம்

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.

author-image
Ravi Kumar
Apr 19, 2018 15:49 IST
loya

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து சிறப்பு நீதி விசாரனைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த முனைவர் ரவிக்குமார் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) எழுதிய கவிதை.

Advertisment

அவர்கள் முஸ்லிம்களைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் கிறித்தவர்களைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் தலித்துகளைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் பெண்களைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் சிறுமிகளைக்கூட சீரழித்துக் கொலைசெய்தார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் புகார் செய்தவர்களைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் சாட்சிகளைக் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

அவர்கள் ஒரு நீதிபதியையும் கொன்றார்கள்

நீதி கிடைக்குமென்று

நீதிமன்றத்திடம் ஓடினோம்

இப்போது

அவர்கள் நீதியையே கொன்றுவிட்டார்கள்

இனி நாம்

எதை நம்பி

எங்கே ஓடுவோம்?

#Ravikumar #Supreme Court #Judge Loya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment