நமது வாழ்வில் எல்லா துயரங்களும் கடந்துவிடக்கூடியதுதான். ஆனால் அப்போதைய மனநிலையில், அது கடக்க இயலாத கடும் சோகத்தை வெறுமையை தரக்கூடியதாக இருக்கிறது. நாம் என்னதான் தனித்து இருந்துவிடலாம் என்று தீர்மானத்தாலும் ஒரு காதலை நம் மனம் தேடத்தான் செய்கிறது. அதில் ஏற்படும் தோல்விலிருந்து மீள்வது கடினமாக ஒன்றாக இருக்கிறது ஒரு உறவு முறிவை, அல்லாது காதல் நிராகரிக்கப்பட்டதை நாம் அவ்வளவு இயல்பாக எடுத்துகொள்ள முடிவதில்லை. நம்மை வருத்துக்கொள்வது, நம்மை மறுத்தவர்களிடம் மீண்டும் பேசி தொல்லை செய்து. அனைவரின் மீதும் கோவம் என்ற மனநிலை நீட்டிக்கும்.
இந்த சமயத்தில் நீங்கள் சிறிது இலக்கியத்தின் பக்கம் செல்லலாம். இதற்காக கார்திக் என்ற பேஸ்புக் ஐயில் யாத்திரி கவிதைகளை எழுதுகிறார். மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நீங்கள் படிக்கலாம். இது ஆகச் சிறந்த கவிதை படைப்புகள் என்ற தர்க்கத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். எளிமையான நடையில் பிரிவை விவரிக்கும் விதமாக இந்த கவிதைகள் அமைந்துள்ளது.

குறிப்பக மனுஷ்ய புத்திரன் கவிதை காதல் பிரிவை கொண்டாடுவதாக அமைந்துள்ளது. மிகவும் எளிமையாக நமது வலிகளை வார்த்தைகளில் கடத்திவிடுவார் அவர். நம்மீது ஒருவகையான பரிதாப மனநிலை இந்த கவிதைகள் உருவாக்கலாம். இதை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், பிரிவை வாழ்வின் அங்காமாக எடுத்துகொள்ள உதவுகிறது இந்த கவிதை. ஒரு காதல்தான் மலரும் என்ற மனநிலையிலிருந்து எழுதப்படுவதில்லை. காதல்களை கடந்து போக இது உதவலாம். வலியை கொண்டாடுவதும் ஒரு கலைதான் என்பதை காட்டுகிறது இந்த கவிதைகள்.
யாத்திரியின் கவிதை காமம் மீதான ஒரு இயல்பான புரிதலை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் அவர் polygyny & Polyandry குறித்து எழுதிய பதிவுகள் உறவு முறைகளை பற்றிய ஒரு சிறு பார்வையை உருவாக்குவதாக உள்ளது. மேலும் இவரின் சொல் தேர்வு, வர்ணிக்கும் முறை என்று எல்லாவித்திலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
நீங்களும் காதல் தோல்வியை கடக்க கொஞ்சம் இவங்க பேஸ்புக் பக்கம் சென்று விசிட் பன்னுங்க பாஸ்.