புத்தக வாசிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி, நடமாடும் அறிவியல் கண்காட்சிகள் (MSE) மூலமாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
Advertisment
நடமாடும் அறிவியல் கண்காட்சிகள் (MSE) என்பது அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு கருப்பொருள்களை கொண்டு பேருந்துகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகள் ஆகும்.
மொபைல் அறிவியல் கண்காட்சி என்பது கிராமப்புறங்களில் அறிவியலைத் தொடர்புகொள்வதற்கான NCSM இன் முயற்சியாகும். இதை சென்னை புத்தக கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு முன் கொண்டுவந்தது பாராட்டிற்குரியது.
இங்கு பரிவதிர்வு (Sympathetic Vibration) , ஆல்பா பீட்டா காமா கதிர்களின் ஊடுருவும் திறன் (Penetration of Ionizing Radiation) , ஏற்று மின்மாற்றி (Step-up Transformer) , பைத்தகரசின் தேற்றம் (Pythagoras theorem) , பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள் (Resistors are connected in parallel) , கிர்ச்சஃபின் முதல் விதி - மின்னோட்ட விதி (Kirchoff's current law) , தொடரிணைப்பில் மின்தடையாக்கிகள் (Resistors are connected in series) , மாறுதிசை மின்னோட்டம் (Alternative current waves) , கதிரியக்கம் (Radiations) போன்ற தலைப்புகளை கவரும் வண்ணம் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு விரும்பி தெரிந்துகொள்கின்றனர். புத்தகங்களை கடந்து அறிவியலையும் கண்காட்சிக்குள் கொண்டுவருவது, மக்களின் மத்தியில் ஒரு அறிவு சார்ந்த சூழலை கொடுக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil