Advertisment

புத்தக கண்காட்சியில் மொபைல் அறிவியல்: குழந்தைகளை கட்டாயம் அழைச்சிட்டு போங்க!

புத்தகங்களை கடந்து அறிவியலையும் கண்காட்சிக்குள் கொண்டுவருவது, மக்களின் மத்தியில் ஒரு அறிவு சார்ந்த சூழலை கொடுக்கிறது.

author-image
Janani Nagarajan
New Update
புத்தக கண்காட்சியில் மொபைல் அறிவியல்: குழந்தைகளை கட்டாயம் அழைச்சிட்டு போங்க!

புத்தக வாசிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சி, நடமாடும் அறிவியல் கண்காட்சிகள் (MSE) மூலமாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

Advertisment
publive-image

நடமாடும் அறிவியல் கண்காட்சி ஊர்தி

நடமாடும் அறிவியல் கண்காட்சிகள் (MSE) என்பது அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு கருப்பொருள்களை கொண்டு பேருந்துகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகள் ஆகும். 

publive-image

மொபைல் அறிவியல் கண்காட்சி என்பது கிராமப்புறங்களில் அறிவியலைத் தொடர்புகொள்வதற்கான NCSM இன் முயற்சியாகும். இதை சென்னை புத்தக கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு முன் கொண்டுவந்தது பாராட்டிற்குரியது.

publive-image

இங்கு பரிவதிர்வு (Sympathetic Vibration) , ஆல்பா பீட்டா காமா கதிர்களின் ஊடுருவும் திறன் (Penetration of Ionizing Radiation) , ஏற்று மின்மாற்றி (Step-up Transformer) , பைத்தகரசின் தேற்றம் (Pythagoras theorem) , பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள் (Resistors are connected in parallel) , கிர்ச்சஃபின் முதல் விதி - மின்னோட்ட விதி (Kirchoff's current law) , தொடரிணைப்பில் மின்தடையாக்கிகள் (Resistors are connected in series) , மாறுதிசை மின்னோட்டம் (Alternative current waves) , கதிரியக்கம் (Radiations) போன்ற தலைப்புகளை கவரும் வண்ணம் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

publive-image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு விரும்பி தெரிந்துகொள்கின்றனர்.  புத்தகங்களை கடந்து அறிவியலையும் கண்காட்சிக்குள் கொண்டுவருவது, மக்களின் மத்தியில் ஒரு அறிவு சார்ந்த சூழலை கொடுக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Book Fair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment