சென்னையைச் சேர்ந்த மீனா கந்தசாமி ஒரு எழுத்தாளர், செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகாலத்திய சாதியொழிப்புப் போராட்டத்தையும் பேசுகின்றனர். இவர் டச் , மெஸ். மிலிட்டன்சி என்ற இரு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்
இவரது இயற்பெயர் இளவேனில். ஆனால் கவிதைகளின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டார்.
மீனா கந்தசாமி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதில் எழுதிய முதற்கவிதை ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றியதாகும். ஜிப்சி காடெஸ்' என்ற இவர் எழுதிய ஆங்கிலப் புதினம் 2014 ஆம் ஆண்டில் வெளி வந்தது. When I Hit You, Exquisite Cadavers ஆகிய புதினங்களையும் படைத்துள்ளார்.
மேலும் தமிழில் இருந்தும் பல உரைநடை மற்றும் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஓராள்போக்கம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மீனா கந்தசாமி நடிகையாக அறிமுகம் ஆனார். இவருக்கு சமீபத்தில் தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் மீனா கந்தசாமி ட்வீட்டர் பதிவு ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், மீனா’ இன்று நான் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சரின் உறுப்பினராக சேர்க்கப்பட்டேன், ஜார்ஜ் எலியட்டின் பேனாவில் என் பெயரில் கையெழுத்திட்டு வேடிக்கை பார்த்தேன். இது என் வாழ்க்கையில் ஒரு அழகான தருணம் என பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
ஜார்ஜ் எலியட்டின் பேனா என்பது என்ன?
ஜார்ஜ் எலியட்டின் பேனா என்பது ஒரு பேனா அல்ல, அவர் ஒரு பெண் எழுத்தாளர். அவரது பெயர் மேரி அன் எவன்ஸ். George Eliot's pen என்ற பெயரை தன் புனைப்பெயராக சூட்டிக்கொண்டவர்.
மேரி அன் ஒரு ஆங்கில நாவலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விக்டோரியன் சகாப்தத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.
ஆடம் பேட் (1859), தி மில் ஆன் தி ஃப்ளோஸ் (1860), சிலாஸ் மார்னர் (1861), மிடில்மார்ச் (1871-72), மற்றும் டேனியல் டெரோண்டா (1876) ஆகியவை அவரது முக்கிய படைப்புகள்.
ஜார்ஜ் எலியட் என்ற பெயர் அவரது கற்பனைப் படைப்புகள் அனைத்தையும் வெளியிட பயன்படுத்தப்பட்டது,
இந்த பெயர் ஓரளவு ஆசிரியரின் பாலினத்தை மறைக்கவும், திருமணமாகத ஒரு பெண், திருமணமான ஆணுடன் வாழும் அவளது ஒழுங்கற்ற சமூக நிலையை மறைக்கவும் உருவாக்கப்பட்டதாக கூறுவதுண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.