இளங்கன்று பயமறியாது என்பார்கள். இளமைக் காலத்தில் விளையாட்டுப் போக்காக வாழ்கையை கொண்டு செல்வது வழக்கம். இளமைக் காலங்களில், ஆபத்து, மரணம் பற்றிய புரிதல்கள் இயல்பாகவே இருப்பதில்லை. அவ்வாறு, இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை, இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை என்ற வைரமுத்துவின் வரிகளை நாம் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ள தான் வேண்டும் .
நிச்சயமற்ற நிகழ்வுகள்/சூழ்நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளை நம்மால் ஈடுசெய்ய முடியாது. ஆனால், காப்பீட்டுத் திட்டத்தின் அத்தியாவசத்தை இளைஞர்கள் புறக்கணிக்கக் கூடாது. இளைஞனாக, உள்ள போது காப்பீடு தேவையில்லை என்று நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். விரைவில் நீங்கள் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தைத் தொடங்கலாம். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். இருந்தாலும், ஒரு துரதிருஷ்டவசமான நிகழ்வு, பல கனவுகளையும், அபிலாஷைகளையும் சிதைக்கக்கூடும்.
மாத வருமானத்தில் குடும்பத்தை ஓட்டும் அனைவருக்கும் டெர்ம் காப்பீட்டுத் திட்டம் அவசியம். திருமணமாகாத வரை, உங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோரின் பாரத்தை பாலிசிதாரர் பகிர்ந்து கொள்ளலாம். திருமணத்தைப் பற்றிய கனவிருந்தால், துணைவியாரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் காப்பீடுத் திட்டம் தேவைப்படுகிறது. நீங்கள் இறக்க நேர்ந்தால் உங்கள் வாரிசுக்கு பலனளிக்கும் டெர்ம் காப்பீட்டு திட்டம் மிக முக்கியமானதாக அமைகிறது .
ஒருவரின் வயது, அபாய சுமை, கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் - தனிப்பட்ட பங்களிப்புகள் (பிரீமியம்) கணக்கிடப்படுகிறது. காப்பீட்டாளர் பாலிசிக்கு செலுத்தக்கூடிய பிரீமியத்தை செலுத்த வேண்டும . காப்பீடு செய்யப்பட்ட காலத்திற்குள் காப்பீட்டாளர் மரணம் அடைந்தால், காப்பீட்டு நிறுவனம் குடும்பத்திற்கு உறுதி செய்யப்பட்ட தொகையை செலுத்துகிறது. டெர்ம் காப்பீட்டுத் திட்டம் அதிகப்படியான பாதுகாப்பை வழங்குகிறது. அது முதிர்வு மதிப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அது தரும் பாதுகாப்பு அளவிட முடியாதது
இன்று நீங்கள் தயாராக இல்லையென்றாலும், செல்வத்தை உருவாக்கும் வழியை விரும்ப வரும் நாட்களில் தயராகிவிடுவீர்கள். எனவே, டெர்ம் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொண்டால், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கை தடம் புரல்வதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் குறைக்கப்படுகிறது. மிகவும் வயதானவர்களுடன் ஒப்பிடும் போது, குறைந்த வயது கொண்ட காப்பீட்டாளர்களுக்கு பிரீமியம் அதிகம். மேலும், காப்பீட்டுக் காலம் முழுவதும் பிரீமியத்தின் தொகையில் மாற்றம் இருக்காது.
பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடுகள் செய்வதன் மூலம் , ஒருவர் தனது இலக்குகளை நோக்கி பயணிக்கலாம். ஆனால், இறப்பு ஏற்பட்டால், அனைத்து வகையான முதலீடுகளும் நிறுத்தப்படும். ஏனெனில், இத்தகைய முதலீடுகள் அனைத்தும் சுயம் சார்ந்த நிதியாகும். அவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர் உயிருடன் இருக்க வேண்டும். டெர்ம் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் இங்கே தான் வருகிறது. இழப்பீடு வருமானம் காப்பிட்டாளரின் துணைவியாருக்கு உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நீண்ட கால இலக்குகளை நோக்கி பயணிக்க வைக்கிறது.
எனவே, வாழ்க்கையின் தொடக்க நாட்களிலேயே டெர்ம் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவது பல நன்மைகளை தருகிறது. உங்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கவனித்துக்கொள்வதற்கான நிதித் திட்டத்தைப் பின்பற்றும் பழக்கத்தை வளர்க்க இது உதவுகிறது. இறுதியாக, திருமணத்திற்குப் பிறகு உங்கள் கவரேஜ் தேவைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் மனைவியை நியமனதாரராக தேர்ந்தெடுங்கள். கவலையின்றி வாழ்க்கையை அனுபவியுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"