ஸ்மார்ட்போன்கள் வாங்குவது முதல் சர்வதேச விடுமுறைகளுக்காக முன்பதிவு செய்வது வரை, ஆன்லைன் வழி நம்மில் பலருக்கு முதல் தேர்வாக உருவெடுத்துள்ளது. மேலும் ஒருவரின் நிதி வாழ்க்கையை வகைப்படுத்த ஆன்லைன் தளங்களும் உதவுகின்றன.
நேரடி பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற மூலதன சந்தை தயாரிப்புகளை வாங்க முதலீட்டு தளங்கள் உள்ளன. இதனால், நீண்ட கால தேவைகளுக்கு சேமிக்க ஒருவருக்கு உதவுகிறது.
இதேபோல், ஒருவர் காப்பீட்டு திட்டங்களை ஆன்லைனில் வாங்கலாம். இதனால் வாழ்க்கையில் நிதி பிரச்னைகளை கவனித்துக்கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டின் தூய்மையான வடிவமான டெர்ம் காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீட்டாளரின் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவோ அல்லது காப்பீட்டுத் தொகுப்பாளரின் வலைத்தளத்தை அணுகுவதன் மூலமாகவோ ஆன்லைனில் வாங்கலாம். காப்பீட்டாளரின் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஒரு டெர்ம் காப்பீட்டுத் திட்டத்தை ஆன்லைனில் வாங்கும்போது, பாலிசி ஒப்பந்தத்தைப் பொருத்தவரை எதுவும் மாறாது. இருப்பினும், இதில் இல்லாமல் போகும் ஒரே விஷயம் காப்பீட்டு முகவர் அல்லது இடைத்தரகரின் பங்குதான். கொள்கை மாற்றங்களுக்காக அல்லது உரிமைகோரல்களுக்காக நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் காப்பீட்டாளருடன் நேரடியாக இணைய வேண்டும்.
ஒரு டெர்ம் காப்பீட்டு திட்டத்தை ஆன்லைனில் வாங்குவதன் சில தனித்துவமான நன்மைகள் இங்கே அளிக்கப்படுகிறது:
எளிதாக காப்பீடு வாங்கும் செயல்முறை
ஒரு டெர்ம் காப்பீட்டு திட்டத்தை வாங்குவது எளிதானதும் சுலபமானதும் ஆகும். இதை உங்கள் வீட்டிலிருந்தோ அல்லதுஅலுவலகத்தில் இருதோ வசதியாக முடிக்க முடியும். அதில் வயது, பாலினம், உறுதிப்படுத்தப்பட்ட தொகை (ஆயுள் காப்பீட்டுத் தொகை) மற்றும் ஒருவர் காப்பீடு கவரேஜ் விரும்பும் காலம் போன்ற விவரங்களை ஒருவர் வழங்க வேண்டும். இவற்றின் அடிப்படையில், ஆன்லைன் காப்பீட்டு கால்குலேட்டர் சில காப்பீட்டாளர்களுடன் ஆண்டுதோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது மாதந்தோறும் செலுத்தக்கூடிய பிரீமியத்தின் அளவை அறிய உதவுகிறது.
காப்பீட்டை வாங்குபவர் என்ற முறையில், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற டெர்ம்மையும் காப்பீடுத் தொகையையும் மாற்றலாம் அல்லது மாற்றம் செய்துகொள்ளலாம். சரியான டெர்ம் காப்பீட்டுத் திட்டத்திற்கு நீங்கள் சென்றுவிட்டால், கட்டணம் செலுத்தும் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் வழியில் இருக்கும். ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஆன்லைனிலும் உள்ளது. மேலும், ஒருவேளை தேவைப்பட்டால் மருத்துவ எழுத்துறுதி மட்டுமே ஆஃப்லைனில் முடிக்கப்பட வேண்டும்.
குறைவான பிரீமியம் செலுத்தும் முடிவு
டெர்ம் காப்பீட்டுத் திட்டங்களை ஆன்லைனில் வாங்குவதில் மிகப்பெரிய நன்மை அதனுடைய குறைந்த செலவு ஆகும். வயது, தொகை உறுதி மற்றும் கால அளவு போன்ற அதே அளவுருக்களில், காப்பீட்டாளரின் வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் வாங்கும் போது நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் ஆஃப்லைனில் வாங்கும் போது பிரீமியத்துடன் ஒப்பிடும்போது செலவு கிட்டத்தட்ட 25 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். ஆன்லைனில் காப்பீடு வாங்குதலில் எந்த இடைத்தரகரும் ஈடுபடாததால், காப்பீட்டாளர் ஆன்லைனில் வாங்குபவருக்குச் செல்லும் செலவைச் சேமிப்பார்.
கூடுதலாக விருப்பங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
ஒருமுறை ஆன்லைனில் நீங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை அதிகரித்தல் அல்லது குறைத்தல் போன்ற பல்வேறு வகையான கால காப்பீட்டுத் திட்டங்களையும் நீங்கள் ஆராயலாம். ஒருவரின் திட்டத்தில் பாதுகாப்பை மேம்படுத்த விபத்து ரைடர், மருத்துவ ரைடர் போன்ற ரைடர்கள் எனப்படும் விருப்ப நன்மைகளையும் ஒருவர் சேர்க்கலாம். காப்பீட்டுத் தொகுப்பாளரின் தளத்தில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களையும் அம்சங்களையும் ஒரே இடத்தில் ஆராயலாம்.
கட்டுப்பாட்டில் உள்ளவை
ஆன்லைனில் வாங்குபவர் என்ற முறையில், நீங்கள் வாங்கும் விஷயங்களின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் உள்ளது. உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாற்றை தெரிவிப்பது முதல் தற்போதுள்ள உங்கள் காப்பீட்டுக் கொள்கைகளின் விவரங்களை வழங்குவது வரை, ஆயுள் காப்பீடு செய்வதன் மூலம் விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்புவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது. ஆன்லைனில் வாங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஆஃப்லைனில் வாங்கியதை விட அதிக நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம். பாலிசிதாரர்கள் உண்மையான காலவரையறை வரை பிரீமியத்தை செலுத்துவதையும், அவர்களிடமிருந்து நடுப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதையும் அதிக நிலைத்தன்மை எண் குறிக்கிறது. இது ஒரு வகையில் வாங்குபவர் தகவலறிந்து வாங்கும் முடிவைக் காட்டுகிறது.
ஆன்லைனில் வாங்கப்பட்டாலும், ஒரு டெர்ம் திட்டத்தை வாங்குபவருக்கு எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு புள்ளி இருக்கிறது. நீங்கள் அதை காப்பீட்டுத் தொகுப்பாளரின் தளத்தில் வாங்குகிறீர்கள் என்றால் அங்கே உதவி என்பது ஒரு தொலைபேசி அழைப்பாக இருக்கும். அதே போல, காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக வாங்கினால்கூட உதவி என்பது அதே தொலைபேசி அழைப்பாகத்தான் இருக்கும். முக்கியமாக, வாங்கத் தொடங்குவதற்கு முன் காப்பீட்டாளரிடம் அல்லது காப்பீட்டுத் திரட்டு வலைத்தளத்தின் நிர்வாகியிடம் பேசுவது எப்போதும் நல்லது. ஆவண சமர்ப்பிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளை முடிப்பதற்கு முன் ஒரு தீர்வைப் பெறுங்கள். கட்டணம் செலுத்தியதும், நீங்கள் மின்னஞ்சல் ஆவணத்தின் மூலமாகவும், நகல் மூலமாகவும் கொள்கை ஆவணத்தைப் பெறுவீர்கள்.
இறுதியாக, உங்களுடைய பரிந்துரைக்கப்பட்டவர்கள் பாலிசி மற்றும் பாலிசி ஆவணம் இருக்கும் இடம் குறித்து அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விஷயங்களை எளிமையாக வைத்திருக்கவும், புதுப்பித்தல் தேதியை மறந்துவிடாமல் இருக்கவும், வங்கிக் கணக்கை உரிய தேதியில் டெபிட் செய்ய உங்கள் வங்கியாளருக்கு நிலையான வழிமுறைகளை வழங்க வேண்டும்.
போதிய தொகைக்கு ஒரு டெர்ம் காப்பீட்டு திட்டத்தை வாங்குவது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கனவுகள், அபிலாஷைகள் மற்றும் குறிக்கோள்கள் தடம் புரளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சரியான படியாகும். ஒரு டெர்ம் காப்பீட்டு திட்டம் வருமான மாற்று கருவியாக செயல்படுகிறது. உங்கள் நீண்ட கால இலக்குகளுக்கு ஒரு பைசாவை சேமிப்பதற்கு முன்பே அதை வாங்க பெரும்பாலான நிதித் திட்டமிடுபவர்கள் திகைப்பதில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Money News by following us on Twitter and Facebook
Web Title:Term insurance plan online purchasing unique advantages
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!