Advertisment

வெளியேற வழியுமில்லை; ரூ1000 உதவியும் இல்லை: சென்னையில் திக்குமுக்காடும் வெளிமாவட்ட மக்கள்

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் அரசு உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு அவர்களை சென்னையிலேயே அணைகட்டி தடுத்துவிட முடியும் என்று நினைப்பது. தவறு, உண்மையில் நம்பிக்கை இழந்து போயிருக்கும் வெளிமாவட்ட மக்களை தடுத்துவைப்பதால் மட்டும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்துவிட முடியுமா?

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai full lock down, kanchipuram full lock down, thiruvallur full lock down, chengalpattu full lock down, chennai full lock down,சென்னையில் மீண்டும் முழு பொதுமுடக்கம், சொந்த ஊர் செல்ல தவிக்கும் வெளிமாவட்ட மக்கள், கொரோனா வைரஸ், other district people try to go from chennai to native place

chennai full lock down, kanchipuram full lock down, thiruvallur full lock down, chengalpattu full lock down, chennai full lock down,சென்னையில் மீண்டும் முழு பொதுமுடக்கம், சொந்த ஊர் செல்ல தவிக்கும் வெளிமாவட்ட மக்கள், கொரோனா வைரஸ், other district people try to go from chennai to native place

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு பொது முடக்க அறிவிப்பால் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சிகளான ஏழை மக்கள், வெளியூரில் இருந்து வேலை நிமித்தமாக சென்னையில் வசிப்பவர்களும் பெரும் பீதிக்குள்ளாகி உள்ளனர்.

Advertisment

முதல் கட்ட பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்தபோது, தமிழக அரசு தீவிர நடவடிகை எடுத்தது. அப்போது தமிழக அரசு இலவச ரேஷன் அரிசி, குடும்ப அட்டைக்கு ரூ.1000, பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2000 ஆயிரம் என அறிவித்தது. ஆனால், சென்னையில் ஒரு குடும்பம் இந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழ போதுமானது இல்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால், மக்கள் அரசின் உத்தரவை மதித்து ஊரடங்கை கடைபிடித்தனர். தங்கள் சேமிப்பைக் கொண்டும் கடன் வாங்கியும் இந்த பொதுமுடக்க காலத்தில் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக செலவும் செய்து சமாளித்தனர்.

அதே போல, வேலை நிமித்தமாக சென்னையில் குடும்பத்துடன் தங்கியுள்ளவர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை சிலமாதங்களில் முடிந்துவிடும் என்று நினைத்தனர். பொது முடக்க தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பிவிடுவோம் என்று நம்பியிருந்தனர். ஆனால், சென்னையில் கடந்த 10 நாடகளுக்கும் மேல் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னை கொரோனா வைரஸ் தொற்றும் மையப்பகுதி என்ற அளவுக்கு மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில்தான், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பெருநகர சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் ஜூன் 19 முதல் ஜூன் 30-ம் தேதிவரை 12 நாட்கள் முழு பொது முடக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்க அறிவிப்பால் சென்னையில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சி மக்களும் வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் மக்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் முழு பொது முடக்கத்தால் வருமானம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் மூழ்கியுள்ளனர். தமிழக அரசு இந்த 4 மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்துள்ளது. அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அளிக்கும் ரூ.1000, அம்மா உணவக இலவச உணவு போதுமானதில்லை என்று தெரிந்தும் அரசு தன்னுடைய கடமை அத்துடன் முடிந்துவிட்டதாக நின்றுவிடுகிறது. முதல் கட்ட பொது முடக்கத்தின்போது அம்மா உணவகத்திலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் சில தன்னார்வலர்களும் உணவு மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினர். ஆனாலும் மக்கள் தவித்துப் போனார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. அவர்கள் பெரும்பாலானோருக்கு சென்னையில் ரேஷன் அட்டை இல்லை என்பதால் அரசின் சலுகைகளை பெறுவதிலும் சிக்கல் உள்ளது. வெளி மாவட்டத்தினர் பலரும் முதல் கட்ட பொது முடக்க அறிவிப்பின்போதே சென்னையை விட்டு சென்றுவிட்டனர். பெரும்பாலான வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இந்த பொதுமுடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கையில் சென்னையிலேயே வசித்துவந்தனர். ஆனால், அவர்களும் மீண்டும் முழு பொது முடக்க அறிவிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளனர்.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பலரும் ஜூன் 19-ம் தேதிக்குள் சென்னையை விட்டு வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்று கிளம்பியுள்ளனர். சாலைகளில் காவல்துறையினர் இ பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பிவருகிறது. அண்டை மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் இ பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருப்பி அனுப்பப்படுவார்கள். தெரியாமல் மீறி வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். அரசும் காவல்துறையும் முக்கிய சாலைகளை மூடிவிட்டு கண்காணித்தால் சென்னையில் இருந்து யாரும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாது என்று கருதுகிறார்கள். ஆனால், மக்கள் அதிகம் அறியப்படாத சுற்று வழிகளிலும் குறுக்கு வழிகளிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டுதான் இருக்கின்றனர்.

கொரோனா அச்சத்தாலும் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்களை அரசு அணை போட்டு தடுத்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள். தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டால் ஒரு நம்பிக்கை வந்துவிடும் என்று கருதுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை கொரோனாவை காரணம் காட்டி தவறு என்று சொல்வது நியாயமில்லை. அரசு அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்றால் அரசு அவர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்வதோடு அங்கே அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் அரசு உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு அவர்களை சென்னையிலேயே அணை கட்டி தடுத்துவிட முடியும் என்று நினைப்பது. தவறு, உண்மையில் நம்பிக்கை இழந்து போயிருக்கும் வெளிமாவட்ட மக்களை தடுத்துவைப்பதால் மட்டும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்துவிட முடியுமா?

தமிழக அரசு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சி மக்களையும் வெளிமாவாட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்க செவி சாய்க்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment