சுஜன் ஆர் சினாய், கட்டுரையாளர்
கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரசின் எதிர்பாராத விளைவுகள், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் எந்த பகுதியையும் அது தப்பிக்க விடுவதாக இல்லை. அமெரிக்க பெடரல் வட்டி விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக பூஜ்யம் முதல் 0.25 சதவீதம் வரை படிப்படியாக குறைந்துள்ளது. தங்கள் நாட்டின் பொருளாதாரம் உலகின் பெரிய பொருளாதாரம் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களின் பங்குசந்தை விகிதம் குறைந்துவிட்டது. கோல்ட்மேன் சாச்ஸ், அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் முதல் மூன்று மாதங்களுக்கு தட்டையாக இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 சதவீதம் சுருங்கும். வேலையின்மை விகிதம், 2008ம் ஆண்டு நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி வந்தபோது ஏற்பட்டதைப்போல், இரண்டு மடங்கு அதிகரிக்கும். இந்த நிலை வணிகம் மற்றும் தொழிலில் மந்த நிலை ஏற்படுத்துவதைப்போல் தோன்றுகிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் பெரிய வர்த்தக தேசமான சீனாவின் பொருளாதாரத்தின் வேகத்தையும் குறைக்கும். அது தொடர்ந்து சங்கிலி எதிர்வினையை தூண்டிவிடும் சாத்தியமும் உள்ளது என்றும் கணித்துள்ளார்.
உலகளவில், சேவை துறை மற்றும் உற்பத்தியாளர் துறையில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வழங்கல் சங்கிலியில் கடுமையான அடி விழும். பயணம், சுற்றுலா, உணவு விடுதிகள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது பொழுதுபோக்கு துறையின் வணிகம் முழுமையாக நிறுத்தப்படும். இது பல மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். கொரோனா வைரஸ் வுகானில் தோன்றிபோது, சீனாவையே பூட்டியபோதே உலக உற்பத்தி பெருமளவு அடி வாங்கியது. தற்போது இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி, மீண்டும் எழுந்து வரமுடியாத அளவிற்கு குத்தியதைபோல் தோன்றுகிறது. தற்போதைய சூழல், பாதுகாப்பு மற்றும் சந்தை கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தியை வலியுறுத்துமா என்பது சிலருக்கு ஆச்சர்யமளிக்கலாம். ஒரு காய்ச்சல் உலகமயமாக்கலை பலவீனப்படுத்தி, எல்லைகளை மூடவைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் வழங்கல் சங்கிலிக்கு இடையூறு செய்துள்ளது. முரணாக, உலகத்தில் ஒருவரையொருவர் சார்ந்தில்லாமல் தற்சார்பு குறித்த, ஒரு புதிய கண்ணோட்டத்தை காட்டுகிறது. மற்ற நாடுகளுக்கு இடையே உள்ள நட்பையும், பொருளாதாரத்தில் உள்ள பங்கையும் அது உணர்த்தியுள்ளது.
கோவிட் – 19லிருந்து முன் எப்போதும் இல்லாத ஒரு சவால், அது உலக பொருளாதாரம் குறித்து புதிய அழுத்தத்தையும் உருவாக்குகிறது. புதிய ஆன்லைன் தொடக்கங்கள் மற்றும் வியாபார சரக்கு மற்றும் மளிகைக்கான டெலிவரி ஆப்கள் உள்ளிட்ட E- commerce எனப்படும் மின் வணிகம் வழங்கல் சங்கிலி திடீரென பெருகுவதற்கு வழிவகுக்கிறது. ஆன்லைன் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், டிவி சிரீயல்கள், இதர பொழுதுபோக்குகள் சார்ந்த பங்குசந்தை விகிதம் பெருகும். அந்த பொழுதுபோக்கு தொடர்பான புதிய தயாரிப்புகளை தொடங்குவது கடினம். ஊரடங்கு உள்ளிட்ட தற்போதைய சூழலால் பொழுதுபோக்கு தயாரிப்பு பணிகள் போதிய வசதிகளின்றி நிறுத்தப்படும்.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது, ஆன்லைன் கல்வி, தொலைதூர கல்வி மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளுக்கு ஊக்கமளிக்கும். கணினி, இணையம், வைபை(wifi) போன்ற வசதிகள் உள்ளவர்களுக்கு, ஒருவருக்கு ஒருவர் பாடம் கற்பித்தல் மூலம் வீட்டிலிருந்து கற்பது ஒரு புதிய துறையை உருவாக்கும். அதிகளவில் இணையத்தை பயன்படுத்தும் நாடுகளுக்கு இது நன்மையாகும். இது இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவை வழங்குபவர்களுக்கு, தற்போதுள்ள அலைவரிசை திறனில் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும். இணைய திறன் மற்றும் அதுதொடர்பான உட்கட்டமைப்பு வசதிகள், தேச அளவில் அல்லது சர்வதேச அளவில், அதிக முதலீட்டுக்கான தேவை உள்ளதாலும், வளர்ச்சிக்கு அதிக நாட்கள் எடுப்பதாலும், அவை எளிதாக மாற்றக்கூடியதல்ல. Hd எனப்படும் உயர் வரையறை சேவைகள், அலைவரிசை நெரிசலை குறைப்பது குறித்து, ஜரோப்பாவில், ஏற்கனவே யூடியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய பெரிய நிறுவனத்தினத்தினர் சிந்தித்து வருகின்றனர்.
சந்தேகமின்றி இந்த சூழ்நிலைகள், ஓட்டத்தில் முன்னோக்கிச் செல்ல முனைவதுடன், 5ஜி திறன்களை வளர்க்க, தற்போதுள்ள வரம்புகளை குறைப்பதற்காகவும் முயற்சிக்கும். குறிப்பாக இது சுகாதார துறையின் உண்மை நிலையாகம். தொற்றுநோய்களை கையாளும்போது, உலகளவில் பெருந்துயரிலிருந்து விரைவாக மீண்டுவருவது 5ஜி தொழில்நுட்பத்தால், மேம்படுத்தப்படும். குறிப்பாக இது பெரிய மற்றும் மக்கள்தொகை நெருக்கமுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
அடுத்த தலைமுறை தொலைதொடர்பு உட்கட்டமைப்பு வசதிகள், பிரதமரின் ஆயுஸ்மான் ஆரோக்கிய யோஜனா போன்ற சுகாதார திட்டங்களின் தேவையை கருத்தில்கொண்டு, செலவு மற்றும் பரப்பை இணைத்தாக இருக்க வேண்டும். குறிப்பாக அதிகளவு பாதிக்கப்படக்கூடிய, தொலைதூர கிராமங்களை சென்றடையும் வகையில், அவர்களுக்கும் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அவர்கள்தான் உணவு உற்பத்தி, வேளாண் அடிப்படை சார் தொழில்கள் மற்றும் சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் உற்பத்திக்கு பிரதான கூலித் தொழிலாளர்கள். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிரில்தான், மொத்த தேசத்தின் வாழ்க்கையே அடங்கியுள்ளது. தொற்றுநோய்களுக்கான பதிலை பிரித்துபார்க்கும்போது, நகர் மைய அணுகுமுறையை தாண்டி பார்க்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது தெளிவாக உள்ளது.
அதிக நெருக்கமுள்ள சேரிகள் மற்றும் அதிக கூட்டமுள்ள ஜெயில்களில், சமூக தனிமை என்பது எளிமை கிடையாது. இந்தியாவிற்கு உள்ள மிகப்பபெரிய சவால், எல்லோரும் கொரோனாவை ஒரே விதமாக பார்க்கவில்லை. இதை மோடி கையாளும் முறை குறித்து, அவருக்கான புகழ்ச்சிதான் பரவலாக உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சமமாக இல்லை. மார்ச் 22ம் தேதி நடைபெற்ற ஜனதா ஊரடங்கின் வெற்றி மற்றும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பால்கனிகளிலும், வாசலிலும் இருந்து, தொற்றுநோயை எதிர்த்து போராடும் ஒவ்வொவருக்கும் செலுத்திய நன்றி தேசத்தின் மனஉறுதியை அதிகரித்தது.
இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு புது வழியை காட்டும். முன்னெச்சரிக்கை மற்றும் நோய்தடுப்பு ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். ரோபோக்கள் மற்றும் ஆளில்லா வாகனங்கள், நோயாளிகளை கையாள்வதில் பங்கு வகிக்கும். போர் காலங்களில் இருப்பதைபோல், தொற்று காலங்களில் பராமரிக்க உதவும். சுகாதார துறைக்காக, உலகளவில் அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்படும். எல்லா இடங்களில் உயர்தர சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும். அது வளமான எதிர்காலத்திற்கு உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து நாடுகளின் ஆர்வமும் அதுவாகத்தான் இருக்கும். ஏழை நாடோ, பணக்கார நாடோ பரிசோதனை கருவிகள், மருந்துகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும். தொற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஒன்று சீனாவைப்போல் அல்லது சிங்கப்பூரைப்போல் ஒரு நாடு செல்லவேண்டுமெனில், செயற்றை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபீசயல் இன்டலிஜென்ஸ், முக அங்கீகாரம் போன்ற தொழில்நுட்பங்கள் தொடர்புகொள்வதை கண்காணிப்பதில் பெரிய பங்கு. சிங்கப்பூரின் அரசு தொழில்நுட்ப ஏஜென்சி மற்றும் அதன் சுகாதார துறை அமைச்சகம் ஒரு ஸ்மார்ட்போன் ஆப் (smart phone app)ஐ உருவாக்கியது. அதற்கு பெயர் சேர்ந்து கண்காணிப்போம் என்பதாகும். அது குறைவான தொலைவில் உள்ள ப்ளுடூத்தை பரிமாறிக்கொள்வதன் மூலம் இயங்குகிறது. போன்களுக்கு இடையே உள்ள சிக்னல்கள் இரண்டு மீட்டர் தொலைவில் கலந்துகொள்ளும் பயனீட்டாளரை கண்டறிகிறது.
தெளிவாக, கோவிட் – 19ஆல் தேச பாதுகாப்பு, உலக பாதுகாப்பு ஆகியவை மறுவடிவமைப்பு பெறுகின்றன. ஏதேனும் பேரிடர் காலங்களில் அதன்மீது மட்டுமே ராணுவத்தினர் கவனம் செலுத்துவார்கள். இம்முறை ராணுவ வீரர்கள் நாட்டையும், தங்களையும், தங்கள் படை கருவிகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதனுடன் நாட்டின் பாதுகாப்பிற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிக சக்தி வாய்ந்த நாடுகள், கலப்பின போருக்கான அச்சுறுத்தல், என்பதையெல்லாம் கடந்து, உலக நாடுகள், எதிர்காலத்திற்கு சாதகமான விஷயங்கள் குறித்து மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதிகளவிலான தொற்றுநோய் நிபுணர்களையும், டாக்டர்களையும், சுகாதார பணியாளர்களையும், இந்த போருக்கான வீரர்களாக உருவாக்க முன்வரவேண்டும்.
கோவிட் – 19க்கு எதிரான தடுப்பு மருந்து நிச்சயம் வரும். ஏதோ ஒரு நிகழ்வைப்போல் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்காமல், அதற்கான விலையாக அதிக உயிர்களை பலிகொடுப்பதை தவிர்க்கலாம். சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட முந்தைய தொற்றுநோய்களைப்போல், கோவிட் – 19னும் எதிர்பாராத ஒரு நிகழ்வுதான். மனித இனம் இதுபோன்ற பல்வேறு இயற்கை சவால்களை சந்திக்கத்தான் வேண்டும். பிரதமர் மோடி சார்க் மற்றும் ஜி-20 நாடுகளுடன் சேர்ந்து ஒரு புதிய உலக உடன்படிக்கை செய்துள்ளார்.
இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் தூதரக அதிகாரி, தற்போது, புதுடெல்லி, மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு மைய இயக்குனர்.
தமிழில் : R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.