டெல்லியில் எதிர்கட்சிகள் பயம் காட்டி, பாஜகவை சாடி, மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்…

உயிரழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எதிர்கட்சிகளும், மறுசீரமைப்பு மற்றும் ஆதாரமற்ற அச்சங்கள் பரவுவதை தடுப்பதற்கும் அரசுக்கு உதவும்

ஜனநாயக நாட்டில் கோபமும், போராட்டங்களும் சட்டப்பூர்வமானவை. வன்முறைகளும், தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் அல்ல.  நகர் முழுவதிலும் வன்முறை வெடித்துச்சிதறியதால், கடந்த சில நாட்கள் டெல்லிவாசிகளுக்கு கொந்தளிப்பான நாட்கள். அரசியல் ஆதாயத்திற்காக கொளுத்தப்பட்ட நெருப்பை அணைக்காமல், எதிர் கட்சியினர், அதை மேலும் வலுப்படுத்திக்கொண்டும், பாஜகவை திட்டிக்கொண்டும், மக்களை தவறாக வழிநடத்திக்கொண்டும் இருப்பது வருத்தமானது.

இனவாதமான, முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பாஜக என்றும், அதுவே வன்முறையை தூண்டுகிறது என்றும், காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்கட்சிகள் கூற முயல்கின்றன. இதை காங்கிரஸ் பல ஆண்டுகளாக கூறிவருகிறது. காங்கிரசிடம் புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்பதால், இதை தொடர்ந்து கூறிவருகிறது. சுதந்திரத்திற்கு முன்னர், சிறு குழுவான சமுதாயங்கள் மற்றும் மதத்தின் பாதுகாப்பில்லாத தன்மையை பயன்படுத்தி, உண்டு கொழித்து வாழ்ந்ததே காங்கிரஸ் கட்சி. இது பாஜகவின் பண்பாடு அல்ல. அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரையும் வளர்ச்சியடைவைத்து, அனைவரின் நம்பிக்கையும் பெறுவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறது.

To read this article in English

அரசியல் ஆதாயங்களுக்காக அன்றி, இந்த கதைகளையும், உண்மையையும் வேறுபடுத்தி காட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையை துளைப்பது பாஜகவுக்கு முக்கியமாகிறது. இந்த திடீர் வன்முறை நடந்த நேரமே, அது யாருக்கு பலனளிக்கிறது என்பதை காட்டுகிறது. அமெரிக்க அதிபர் இந்தியா வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை இரவில் இந்த மோதல் தொடங்குகிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுணிய வைப்பதற்காக நடத்தப்பட்டது.

சில பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை சுட்டிக்காட்டி, டெல்லியை எப்போதும் ஒரு கொந்தளிப்புடனே வைத்திருப்பதில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் அவ்வாறு பேசியவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், கட்சி தலைமையிடம் கடுமையாக கண்டித்ததை, எதிரணியினர் எவரும் கண்டுகொள்ளவேமாட்டார்கள். இந்த ஆத்திரமூட்டும் பேச்சுக்களை காரணம் காட்டி, டெல்லியின் நிலையை சிறிதுசிறிதாக மூடி மறைப்பதை புத்திசாலித்தனமான திசைதிருப்பும் உத்தியாக கையாண்டுகொண்டு இருக்கிறார்கள். தேவையான வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் கற்களை சேகரித்து வைத்துக்கொண்டு, இந்த வன்முறை, திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். டெல்லியின் அமைதியை குலைக்க வேண்டும் என்பதற்கான தயாரிப்புகள் பல மாதங்களாகவே நடந்தன. டிசம்பர் மாதத்தில், கலவரத்திற்கு ஆயுதம் கொடுத்தவர்கள்தான், ஷாகின் பாக் போராட்டத்தில் மக்களை தவறாக வழிநடத்தியவர்கள். ஷாகின் பாக் போராட்டங்களை அரசு திறனுடனே கையாள்கிறது. எதிர்கட்சிகள் புத்திசாலித்தனமாக நடக்கின்றன. அவை முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகளில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் பெயரால் போராட்டத்தை தூண்டிவிடுகின்றன.

குடியுரிமை திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்ப்பது ஜனநாயக மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்ட நாட்டில், ஜனநாயகத்தை எதிர்ப்பதற்கு வழிவகுக்கக்கூடும். டெல்லியில் நாம் பார்க்கக்கூடிய இந்த வன்முறை, இந்திய சிறுபான்மையினரிடம் பரப்பப்பட்டுள்ள பயத்தின் விளைவால் ஏற்பட்டதாகும். எனவே எதிர்க்கட்சிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும். யார் இந்த பய உணர்வை பரப்புவது? இந்த ‘’அமைதியான’’ போராட்டத்தில், தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு படையினர், எப்படி வன்முறையை நிறுத்தி அமைதியை கொண்டுவரமுடியும்? பொதுச்சொத்துக்கள் எவ்வாறு சேதப்படுத்தப்பட்டன? இந்த போராட்டத்தை காந்திய வழியிலான போராட்டம் என்று குறிப்பிடுவது, காந்திக்கு செய்யும் அவமரியாதையாகும். ஒரு நாட்டின் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தப்படும்போது அது நம்பகமின்மைக்கு வழிவகுத்து, சமுதாயத்தை அராஜக வழியில் கொண்டு செல்லும் என்பதை எதிர்கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம் என்பது உண்மையல்ல என்பது போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே தெரிகிறது, ஏனெனில் முஸ்லிம் அகதிகள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குடியுரிமை திருத்தச்சட்டம் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது எனக்கேட்போது, எதிர்க்கட்சிகள் பதிலளிக்க தடுமாறின. ஆனால் போராட்டக்களங்களில் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக ஜேஎன்யூ மோதல், விசாரணையின்றி கொலை, முத்தலாக், ராமர்கோயில், காஷ்மீர் ஆகியவற்றை பட்டியலிட்டு பேசி போராட்டங்களுக்கு மேலும் தூபமிடுகின்றன. அவர்களின் எல்லா பேச்சுக்களிலும் ஒன்று மட்டும்தான் பிரதானம், அது மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது.

மேலும் படிக்க : மசூதிகள் தீயில் இரையானது போதும்… சிவன் கோவிலை காக்க முன்வந்த இஸ்லாமியர்கள்

எனவே மக்கள் அரசுக்கு எதிராக ஒன்றுகூட வேண்டும் என்பதாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல என்பதை, அரசு பல்வேறு சூழல்களில் தெளிவாக விளக்கியுள்ளது. அதன் நோக்கம் அண்டை நாடுகளில் இருந்து வரும் துன்பப்படும் சிறுபான்மையினரை பாதுகாப்பது மட்டுமே. அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டமும் இல்லை. இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள மனமின்றி, சாஹின் பாகில் ஒரு சதித்திட்டத்தை தீட்டி, நிலைகுலைய வைத்து, மத்திய அரசை பயனற்ற ஆள் என்பதை காட்டும் வகையில், டிரம்பின் வருகையை பயன்படுத்திக்கொண்டு, அதற்கு பாஜகவை பாலிகடாவாக்கியது எதிர்கட்சிகள்தான்.

மனித உயிர்கள் இதில் சம்மந்தப்படவில்லையென்றால், பாஜக மீதான குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியதாக இருந்திருக்கும். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே இறுதியல்ல என்பதை எதிர்க்கட்சிககள் உணர்ந்திருக்கும், அரசியலில் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாம் அதிகாரத்தை தேடுகிறோம். இது ஆளுங்கட்சி, எதிர்கட்சி இருவருக்கும் பொருந்தும். மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்வது, பயத்தை அதிகரிக்க வைத்து ஓட்டு கேட்பது என்று எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. டெல்லியில் அதற்கான விலை, தனது 8 வயது மகனை தவிக்கவிட்டுச்சென்ற காவலர் ரத்தன் லாலின் உயிர் உள்பட 30க்கும் அதிமான உயிர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

அரசு இயல்பு நிலையை மீட்டெடுக்க 24 மணிநேரமும் பணி செய்துகொடிருக்கிறது. உள்துறை அமைச்சர் டெல்லி கவர்னர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், நகரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தொடர்ந்து பயணித்து, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பாஜக அதன் கடமைகளில் வாழ்ந்து, அதன் போட்டியாளர்கள் பற்றவைக்கும் நெருப்பை அணைக்கும்.

ஜனநாயக நாட்டில் கோபமும், போராட்டங்களும் சட்டப்பூர்வமானவை. வன்முறைகளும், தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் அல்ல. உயிரழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எதிர்கட்சிகளும், மறுசீரமைப்பு மற்றும் ஆதாரமற்ற அச்சங்கள் பரவுவதை தடுப்பதற்கும் அரசுக்கு உதவும் என்று பாஜக நம்புகிறது.

இக்கட்டுரையை எழுதியவர் பூபேந்திர யாதவ், ராஜ்ய சபா உறுப்பினர், பாஜக தேசிய பொது செயலாளர்

தமிழில்: R.பிரியதர்சினி.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi violence opposition has stoked fears blamed bjp in a bid to misguide the people

Next Story
இந்தியாவில் மந்தநிலை… அமெரிக்காவில் உயரும் பொருளாதாரம்! ட்ரம்பின் வெற்றி அது தான்!Coronavirus outbreak US announces 2.9 million dollars
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com