Advertisment

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றதா மோடி அரசு

விவசாயிகளின் தற்போதைய நிலை, வருமானம், வாழ்வாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மத்திய அரசு செயல்படும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
farmers

அசோக் குலாட்டி, ஸ்வேதா சைனி

Advertisment

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைத்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு வருட ஆட்சியில், விவசாயிகளுக்கு மோடி அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கின்றதா என்ற கேள்வியுடன் இக்கட்டுரையை துவங்குவோம். எல்லாருடையை வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் 2014ம் ஆண்டில் பிரதமர் மோடியின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் இருந்தன. இந்த அறிக்கைகளே மோடியின் அரசிடம் இருந்து விவசாய மக்கள் அதிக நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பினையும் உருவாக்கிவைத்திருந்தார்கள்.

2013ம் ஆண்டு, இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாய மக்களுக்கும் ஒரு வேண்டுகோள்விடுத்தார் நரேந்திர மோடி. அதன்படி அவர்களின் விவசாயத்திற்கு உதவிக்கொண்டிருந்த பழைய இரும்பு பொருட்களையெல்லாம், ஒற்றுமையின் சிலை என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலையை வரோதரா மாவட்டத்தில் கட்டுவதற்கு தானமாக கேட்டுக் கொண்டார். குஜராத்தில் முதன்முறையாக கூட்டுறவு பால்பண்ணை திட்டத்தை வல்லபாய் படேல் தான் அறிமுகம் செய்து வைத்தார். அதனை நினைவு கூறும் விதமாகவும், விவசாய நாடு என்ற பெயரினை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும் இந்த சிலை அமையும் என்று அவர் பேசியது விவசாய மக்களின் மனதில் மோடி நிலைத்துவிட காரணமாக அமைந்தது. விவசாயத்திற்காக பயன்படுத்திய பொருளை வைத்து உருவாக்கப்படும் சிலை என்ற எண்ணம் மோடியை தனித்துவம் வாய்ந்தவராக காட்டியது. விவசாயிகளுக்கான அறிக்கைகளும் கூட அப்படியே தனித்துவம் வாய்ந்தவையாக பாவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான அந்த அறிக்கையில் முக்கியதுவம் வாய்ந்த இரண்டு விஷயங்கள் இதுவே. 1. விளைவிக்கும் பொருட்களிற்கு 50% மேல் வருமானத்தினை உறுதி செய்தல். 2. இந்திய உணவுக் கழகத்தினை மாற்றி உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி, சேமித்து, முறைப்படி மக்களுக்கு விநியோகிக்கும் முறையினை சீரமைத்தல் என்பதாகும்.

oped

முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்த மோடி அரசிற்கு தோராயமாக நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் அனைத்து பயிர்களுக்குமான லாப விலை நிர்ணயம் குறைந்துவிட்டது. மேலும், 2014 வரை நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கென சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலை 3.4%மாக அதிகரித்து, உணவு உற்பத்தி விலையின் அதிகரிப்பால் மீண்டும் குறைந்தது. இந்த நான்கு வருடங்களில் விளைநிலங்களின் சந்தை மதிப்பும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் இந்த காரணங்களால் அதிக அளவு உளைச்சலிற்கு ஆளானார்கள். விளைவாக உற்பத்தி விலையில் இருந்து குறைந்த பட்ச ஆதரவு விலையினை 50% மேலாக எப்படி நிலைநிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது அரசாங்கம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே இருக்கின்ற நிலையில் பாஜக, இழந்த விவசாய மக்களின் நம்பிக்கையினை மீட்டெடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, ஆட்சியில் அமைந்த மூன்றாவது மாதமே, அடல் பிஹாரி அரசவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்த சாந்தகுமார் அவர்களின் தலைமையில் ஒரு உயர் மட்ட குழுவினை உருவாக்கினார்கள். இந்திய உணவுக் கழகத்தின் அமைப்பு மற்றும் செயல்களை மாற்றி அமைப்பதற்கான கருத்துகள் அந்த குழுவிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. அதன் விளைவாக நான்கு முக்கிய பரிந்துரைகளை ஜனவரி 2015ல் முன் வைத்தது அந்த உயர்மட்ட குழு. அதன்படி, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மற்றும் சத்திஸ்கரில் இருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கொள்முதல் மையங்களை பிஹார், ஒடிசா, மற்றும் உத்திரப்பிரதேசத்திற்கு மாற்ற வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 67% மக்கள் தொகையினருக்கான வரம்பினை 40%மாக மாற்றியது. மக்களுக்கான தானியம் வழங்கும் மையங்களில் பண மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றாவதாக தானியங்களை பாதுகாப்பதிற்காக தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுதல் மற்றும் நான்காவதாக விவசாயிகளுக்கு தரப்படும் மானியத்தினை பணமாக தருதல் மற்றும் உர உற்பத்தி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தல். இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன பின்பும் இதில் எந்தவொரு பெரிய மாற்றங்களும் ஏற்படவில்லை.

இந்தியாவின் முதல் உணவு பாதுகாப்புத் திட்டமான மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் சில திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்தல் மற்றும் ரேசன் கடைகளில் பாய்ண்ட் ஆப் சேல் மிஷின்கள் வைத்தல் மூலம் 2.75 கோடி போலியான குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் தானியத் திருட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் மத்திய சேமிப்புக் கிடங்குகளில் இருந்து எடுக்கப்படும் தானியங்களின் அளவும் குறைக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் 2014ல் தானியக் கிடங்கில் இருந்து எடுக்கப்படும் உணவுப் பொருட்காளின் சதவீதம் 46.7%மாக இருந்தது. ஆனால் 2018 மார்ச் - 31ல் 54.4% அதிகரித்து இருக்கின்றது. இதுவரை தரப்பட்ட உணவு மானியத்தின் மதிப்பீடுகளும் உயர்திருக்கின்றது. 2013-2014ல் 92,000 கோடியாக இருந்த இம்மதிப்பு, 2018ல் 1,69,000 கோடியாக உயர்ந்திருக்கின்றது. ஆனால் இதுவரை இந்திய உணவுக் கழகத்தால் வழங்கப்படாத மானிய இருப்பாக ரூபாய். 1.34 லட்சம் கோடியாக இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் சரி வர நிறைவேற்றப்படவில்லை. மேலும், உணவு உற்பத்தி இந்த நான்கு ஆண்டுகளில் வீழ்ச்சியியைத்தான் கண்டிருக்கின்றது. மேலும், இந்திய உணவுக் கழகம் மறுசீரமைப்பு அடைவதற்கு பதிலாக, முந்தைய ஆட்சி காலங்களில் அது எப்படி செயல்பட்டதோ அவ்வாறாகவே தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்த விவசாயிகளின் தனி நபர் வருமான மதிப்பானது (5.2 % 2010-11 to 2013-14) சரிபாதிக்கும் கீழாக (2.4%) மோடியின் ஆட்சியில் குறைந்திருக்கின்றது. விவசாயிகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் வருமானம், வாழ்வாதாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு மத்திய அரசு செயல்படும் என்று நம்பிக்கையுடன் இம்மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2.5.18 அன்று, அசோக் குலாட்டி, ஸ்வேதா சைனி ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். எழுத்தாளர் அசோக் குலாட்டி, ICRIER இல் வேளாண் பேராசிரியர் ஆவார். ஷ்வேட்டா சைனி வேளாண் ஆலோசகர்.)

strong>தமிழில் நிதியா பாண்டியன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment