காலாவிற்கு பின்பு அரசியல் பேசிய ரஜினியின் பேட்ட !

ஒரு நாள் இரவில் முடிவான கதை இல்லை...

ஜி. ப்ரமோத் குமார்

Rajinikanth’s Petta Political Message : ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் பேட்ட படம் தமிழகம் மற்றுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெற்றிநடை போடுகிறது. கபாலி மற்றும் காலா படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருந்தது பேட்டை.

ஸ்டைலான, மாஸான, விண்டேஜ் ரஜினிகாந்த்தை மீண்டும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம் காதல், துரோகம், பழிக்குப் பழி என்ற தலைவரின் படமாகவே மக்களிடம் சென்றுள்ளது. இதனை அரசியல் மீது ஈடுபாடற்ற நடிகனாகவே வலம் வருகிறார் ரஜினி.

உண்மையா ?

படத்தை உண்ணிப்பாக கவனித்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மிகவும் ஸ்டைலாக, ஆனால் மிகவும் நுணுக்கமான அரசியல் பேசும் படமாகவே தான் பேட்டையும் இருக்கிறது. இதற்கு முன்பு வெளியான காலாவும், கபாலியும் அரசியலை பேசும் படமாகவே மக்களிடம் சென்றது. கபாலி படத்தின் டீசர், தலித் தலைவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியதாக இருந்தது. காலா படத்தில் தமிழ் தலித் இயக்கத்தினருக்கும் – கார்ப்பரேட் ரைட் விங்கிற்கும் இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

காலா படத்தில் ரஜினியும், ரஜினியை சுற்றியுள்ள மனிதர்களும் அம்பேத்காரின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களாக வலம் வருவார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்த ரஜினி, கார்ப்பேரேட், தமிழ் அல்லாத ரைட் விங்கிற்கு எதிரானவராக நடித்திருந்தார்.

பேட்ட படத்திலும் இதே போன்ற அரசியலைத் தான் பேசியிருக்கின்றார் ரஜினி. ஆனால் படத்தினை உருவாக்கிய விதமும், அதனை உருவாக்கிய இயக்குநரும் வெவ்வேறானவர்கள். இங்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களும், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளையும் மிகவும் நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

வில்லன் கதாப்பாத்திரத்தில் வரும் ஜித்து என்னும் விஜய் சேதுபதி “நெற்றியில் காவி நிறப்பொட்டு வைத்து, காவி துண்டினை எப்போதும் படம் முழுவதும் கழுத்தில் சுற்றியுள்ளார். நிறைய நபர்களை உயிரோடு எரித்துக் கொல்லும் கொடூரமான வில்லன், வட இந்தியாவில் நடைபெறும் மாப், பசு பாதுகாவல், லிஞ்சிங், மோரல் போலிசிங்க் என எதையும் விட்டு வைக்காமல், உத்திரப் பிரதேசத்தை மையப்படுத்தி வாழ்ந்தே உள்ளார்.

ஜித்து என்ன தான் சைட் வில்லனாக இருந்தாலும், முக்கியமான வில்லனாக வருகிறார் சிங்காரம் எனும் நவாஸூதீன் சித்திக். ஜித்துவைப் போலவே இவரின் காட்சிகளிலும் காவி தலைவர்களின் பிம்பத்தை பிரதிபலித்துள்ளது. ஒரு காட்சியில் கங்கைக்கு ஆராத்தி எடுப்பார் சிங்காரம்.

தமிழகத்தில் இருக்கும் பேட்ட வேலனுக்கும், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஜித்துவிற்கும் என்ன தொடர்பு, ஏன் சிங்காரம் உத்திரப் பிரதேசம் சென்றார், அவர்களின் முந்தைய பிணைப்பு என்ன என்பதும் படத்தின் மிக முக்கியமான கதை.

ஜித்துவும் ,சிங்காரமும் கொல்லத் துடிக்கும் அன்வர், பேட்ட வேலனின் பால்ய காலத்து நண்பன் மாலிக். இங்கும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது.

ரஜினியை நல்லவராக காட்டிக் கொண்டு, இறுதியில் நானும் வில்லன் தான் என்று கதையின் இறுதியில் ஒரு ட்விட்ஸ் வைக்கப்பட்டு, அரசியல் சதுரங்கத்தை ஆடியுள்ளார் பேட்ட ட ரஜினி.

ஒரு நாள் இரவில் முடிவான கதை இல்லை. வருடக் கணக்கில் கதையின் ஒவ்வொரு பகுதியையும் ரஜினியுடன் விரிவாக பேசியே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் ஏன் உ.பியில் வைக்கப்பட்டிருக்கிறது, அரசியல் எங்கு பேசப்பட வேண்டும் என்பதற்கெல்லாம் ரஜினியிடம் அனுமதி பெற்ற பின்பே படமாக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் கடந்த மூன்று படங்களும் அரசியல் படங்கள் தான். அதில் சூப்பர் ஸ்டாருக்கான சார்ம், ஸ்டைல், எண்ட்ர்டெய்ன்மெண்ட் என எதையும் மறைக்காமல் அப்படியே உருவாக்கப்பட்டது. பேட்ட படத்தினையும் காலாவினையும் ஒரே மாதிரியாகவே பார்த்து மகிழ்கின்றார்கள் ரசிகர்கள். ஆனால் காலாவில் அம்பேத்காரின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close