கர்நாடகாவில் காங்கிரஸ் எழுமா? வீழுமா?

இருக்கும் மிகச் சிறிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, காங்கிரஸ் அதிக தொகுதிகளைப் பெற்று ஆட்சியமைக்குமானால், கர்நாடகா, மோடியின் சிறிய கூடாரமாகவே தெரியும்.

சுர்ஜீத் எஸ். பால்லா

தனி நபர் வருமானத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தில் பெரும்பங்கும் வகிக்கும் கர்நாடகாவில் தேர்தல் என்று சொன்னால் யார் தான் அதைப்பற்றி அதிகம் பேசாமலும் சிந்திக்காமலும் இருக்க முடியும். 2014 பொதுத்தேர்தலில் தொடங்கி காங்கிரஸ் கட்சிக்கு இறங்குமுகமாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஏறுமுகமாகவும் இருக்கின்றது, இந்திய அரசியல் களமும், மக்கள் அரசியல் கட்சிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும். 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்தென்ன என்பதை நாடே அறியும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம், இந்த தேர்தலைப் பொறுத்த வரை. ஆனால் கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார்? காங்கிரஸ் கட்சி தன்னுடைய அழிவிழிருந்து காத்துக் கொள்ளுமா, ராகுல் காந்தி சிறந்த தலைவராக இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடிப்பாரா அல்லது பாஜக மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விடுமா என்பதற்கெல்லாம் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றது இந்த தேர்தல். கர்நாடக சட்டமன்றம் 224 தொகுதிகளையும் வேட்பாளர்களையும் கொண்டிருக்கும் தென்னிந்திய மாநிலமாகும்.

இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட, பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்றது. ஆகவே காங்கிரஸ் அதிக இடங்களை வென்றும் அதனால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அது சிறந்த முடிவாக இருக்காது. இங்கே தோல்வியுற்றாலும் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதி செய்ய அதிக முனைப்புடன் செயல்படும். ஆனால், கோரக்பூர் மற்றும் இராஜஸ்தானின் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளின் களிப்பில் இருக்கும் காங்கிரஸ் இத்தேர்தலில் தோல்வியுற்றால் அது அக்கட்சியினை மேலும் வலிமையற்றதாக்கிவிடும்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்ஸிற்கு சாதகமாக அமையாமல், காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டால் இத்தேர்தல் மும்முனைப் போட்டியாகவே இருக்கும். ஜனதா தளம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இடத்தினை விட பத்து இடங்கள் குறைவாக (30) பெற்றாலும் கூட இத்தேர்தல் களத்தில் காங்கிரஸ் பெருத்த சறுக்கலை சந்திக்க நேரிடும். ஆக, காங்கிரஸ் இரண்டாவது இடத்தினைப் பெற வேண்டும் என்றாலும் 50-90% அதிக இடங்களை அது கைப்பற்ற வேண்டும். மொத்தம் 224 தொகுதிகளை கொண்டிருக்கும் கர்நாடக சட்டமன்றத்தில் 6 இடங்களை சுயேட்சைக் கட்சிகள் பெற்றுவிடும். ஆட்சியினை அமைக்க காங்கிரஸ்ஸோ, பாஜக-வோ 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 30 இடங்களை ஜனதா தளம் கைப்பற்றிவிட்டால், மிச்சம் இருக்கும் 75 தொகுதியில் வெற்றி பெறும் அணி எதிர்கட்சியாக சட்டசபையில் அமரும். இருகட்சிகளுக்குமான இருக்கை விகிதம் என்பது 1.5மாக இருக்கும்.

தொகுதிப் பங்கீட்டினை கணக்கில் கொண்டால், வெற்றி பெரும் கட்சி 120 இடங்களையும், ஜனதா தளம் 35 இடங்களையும் பெறுகின்றது என்றால், இரண்டாவது அணியால் 64 இடங்களையே தக்கவைத்துக் கொள்ளும். மேற்கூறிய விகிதம் 1.5லிருந்து 1.9 உயரும். ஒருவேளை காங்கிரஸ் இரண்டாவது அணியாகவும், பாஜக 120 இடங்களையும் கைப்பற்றுமெனில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் எப்படியாக இருக்கும். காங்கிரஸ் தலைமையகம் ஒரு நீண்ட எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றது. மேலும் அதன் தலைமைப் பொறுப்பினை ராகுல் காந்தியிடம் தந்த பின்பு இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாவே இருக்கின்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் பட்சத்தில், கட்சித் தலைமை, எதிர்பார்ப்பு, நேரு குடும்பத்தின் தொடர் ஆட்சிமுறை ஆகியவைப் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடலாம். இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதால் எதிர்பார்ப்புகள் உருவாகத்தான் செய்யும். ஆனால் மொத்த தேசத்திலும் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்வதால் (பஞ்சாப் மற்றும் புதுச்சேரி) இந்நிலையை மாற்ற நிறைய உழைக்க வேண்டியது இருக்கின்றது என்பதையும் காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது.

இந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக நாங்கள் கர்நாடகாவில் பயணித்த போது, ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டுப் போட நிறைய காரணங்கள் இருக்கின்றன. தென் கர்நாடகாவில், குறிப்பாக மைசூரில் இருக்கும் வாக்காளர்கள், இடைத்தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை அவர்கள் உள்ளூர்வாசிகளின் தலைமையினையே அதிகம் விரும்புகின்றார்கள். அதன் விளைவாகவே அவர்கள் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றார்கள். ஆனால் தேசிய அளவில், பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்கள் மோடிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் கூறுகின்றார்கள். பழைய ஆங்கிலேய நாளிதழ்களையெல்லாம் ஒருமுறை பார்வையிட்டால், மோடி 80களில் பெற்றிருந்த அதே புகழினை திரும்ப பெற்றிருக்கின்றார் என்பது தெரியும். இருக்கும் மிகச் சிறிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி ஒருவேளை காங்கிரஸ் அதிக தொகுதிகளைப் பெற்று ஆட்சியமைக்குமானால், கர்நாடகா, மோடியின் சிறிய கூடாரமாகவே தெரியும்.

கருத்துக் கணிப்பு மற்றும் கருத்துக் கணிப்பாளர்களால் மட்டும் இம்முடிவினை உறுதி செய்யவில்லை. 2013 தேர்தலை கருத்தில் கொண்டால் நாங்கள் ஏன் இந்த முடிவிற்கு வந்தோம் என்பதும் தெரியும். 2013ல் பாஜக மற்றும் ஜனதா தளம் என இரண்டு கட்சிகளும் தலா நாற்பது நாற்பது இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் சுமார் 122 இடங்களையும் கைப்பற்றியது. பாஜகவிற்கு 83 இடங்கள், காங்கிரஸிற்கு 89 இடங்கள் மற்றும் ஜனதா தளத்திற்கு 31 என்று இருந்த கருத்துக் கணிப்பினையும் வாக்கு விகிதத்தையும் மாற்றி காங்கிரஸ்சை வெற்றி பெற வைத்தது கர்நாடக ஜனதா பக்ஷா கட்சியும் அதன் தலைவர் எடியூரப்பாவும் தான். 2012ல் பாஜகவால் அணியிலிருந்து நீக்கப்பட்ட இவர் 2013 சட்டமன்ற தேர்தலில் கர்நாடக ஜனதா பக்ஷா கட்சியின் தலைவராக நின்று போட்டியில் பங்கேற்றார். இதனுடன் ஸ்ரீராமுலுவின் கட்சியாலும் இவ்வோட்டுகள் சிதறுண்டன. 2013ல் காணாமல் போன பாஜக வாக்கு வங்கியை திரும்ப பெற்றுவிட்டால், பாஜகவின் வெற்றி வாய்ப்பு இன்னும் உறுதியாகின்றது

இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு மற்றும் கர்நாடகாவில் பாஜக பெற்ற இடங்கள், தோல்வி விகிதம் என அனைத்தையும் வைத்து பார்க்கும் போதும், 2014ல் இழந்த 5% வாக்கு விகிதங்களையும் கணக்கில் கொள்ளும் போது 107 இடங்களில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று கணக்கிடப்படுகின்றது. 107ல் இருந்து 125 வரையிலான இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றது. சராசரி என்று கணக்கிடும் போது 116 பெறலாம். இப்படியான ஒரு முடிவினை காங்கிரஸ் கட்சியை வைத்து வரையறுப்பதில் சற்று சிக்கல்கள் இருக்கின்றன. 25-30 இடங்களில் ஜனதா தளம் பெற வாய்ப்பிருப்பதால் 74 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கின்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், 12.05.18 அன்று சுர்ஜீத் எஸ். பால்லா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் : நிதியா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close