Advertisment

கர்நாடகா தேர்தல் : எடியூரப்பா பெயரை உச்சரிக்க முடியுமா?

கர்நாடகாவில் இந்தி மொழியில் பிரச்சாரம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. கன்னடர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ, நமக்கு புரிகின்றது இல்லையா? அது போதும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karnataka-elections-illustration-759

ஷைலாஜா பிஜுபாய்

Advertisment

கர்நாடகாவில் நேற்று மோடி தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் தன்னுடைய பிரதமர் கனவினை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக இந்த கர்நாடகா தேர்தல் களத்தினை பயன்படுத்தி சூறாவளியாய் பிரச்சாரம் செய்து வருகின்றார் கர்நாடகாவில். என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அனைவரும் திடீரென அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராவார் என்று அதி தீவிரமாக பேசத் தொடங்கி ராகுலை பிரதமராகவே ஆக்கிவிட்டார்கள்.

அதிர்ஷ்டசாலி ராகுல் காந்திக்கு அவர் அம்மாவிடம் இருந்து சில அறிவுரைகள் கிடைத்திருக்கலாம். இந்த தேர்தலில் முதல் முறையாக சோனியா காந்தி நேற்று தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருடைய தாய்மொழியான இத்தாலி மொழியில் பேசவில்லை. மாறாக மோடி பேசும் அதே மொழியைத் தான் இவரும் பேசுகின்றார் என்பதால் நமக்கு கவலை ஏதும் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம். கர்நாடகாவில் இந்தி மொழியில் பிரச்சாரம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. கன்னடர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ, நமக்கு புரிகின்றது இல்லையா? அது போதும்.

மோடி, ராகுல் காந்தியை தாக்கிப் பேசினார். பதிலுக்கு ராகுலும் மோடியை தாக்கிப் பேசினார். இந்த குற்றம் சாட்டிப் பேசிக் கொண்டிருப்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் செய்யப்படும் மிக முக்கியமான வேலை. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதில் இரு தரப்பினரும் சிறந்த வல்லுநர்கள் போல. இப்படி இவர்கள் பேசிக் கொண்டே இருப்பதால் செய்தித் துறையில் வேலை பார்ப்பவர்களின் வேலை மிக எளிதாக மாறிவிடுகின்றது. நாங்கள் இந்த குற்றச் சாட்டுகளின் மத்தியில் இருந்து தரமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம். "காம்தாருக்கும் நாம்தாருக்கும் இடையே போர்" என்கின்றது சிஎன்என் நியூஸ் 18.

ராகா vs. நமோ என்ற டேக்லைன்னும் நன்றாக வேலை செய்கின்றது என்று தான் எங்களுக்கும் தோன்றுகின்றது. மத்திய பிரதேசத்திற்காக மைதான்-இ-ஜங், சத்தீஸ்கர்க்காக சத்தீஸ்கர் கா சேலஞ்ச், ராஜஸ்தானிற்காக ராஜஸ்தான்ஸ் ராயல் பேட்டில் என்றெல்லாம் டேக்லைன்னை தயாரித்து வைத்திருக்கின்றோம். ஐபிஎல் இல்லாமல் இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமா என்றே தெரியவில்லை.

"கர்நாடகாவின் குருஷேத்திரம்" என்று டிவி 9யில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் அதன் தொகுப்பாளருக்கு ஒரு வலுத்த சந்தேகம் என்னவென்றால், ஏன் மோடியையும் ராகுலையுமே தொடர்ந்து குடைந்து கொண்டிருக்கின்றோம் என்று.. நீங்கள் சொல்லுங்கள் சித்தராமைய்யா, எடியூரப்பா போன்ற பெயர்களெல்லாம் எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இத்தனை பெரிய பெயர்களை எப்படி டேக்லைனில் போட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது. முன்னேற்றம் பற்றி மோடிக்கே கவலை இல்லை என்னும் போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அட, அதவிடுங்க, சித்தாவும் எட்டியும் அவங்க சொந்த மொழியான கன்னடத்துடல பேசுவாங்க.. அதை வட இந்தியாவில் ஒளிபரப்பினால் யார் பார்ப்பார்கள்? யாருக்கு புரியும்? ரேட்டிங்க என்ன ஆவது?

என்னுடன் வேலை பார்ப்பவர்கள் இன்னும் அந்த ராகுலின் பிரதமர் கனவிலிருந்து வெளிவரவில்லை. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பாளர் "ராகுல் பிரதமராக விரும்புகின்றார்" என்பதற்கும் "ராகுல் மோடியாக விரும்புகின்றார்" என்பதற்கும் என்ன வித்தியாசம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். மற்ற ஊடகங்கள் எல்லாம், ஆராய்ச்சியினை முடித்துவிட்டு ஒரு முடிவிற்கே வந்துவிட்டார்கள். "நான் பிரதமராவேன்" என்கின்றது டைம்ஸ் நவ். "நான் 2019ல் உங்களின் பிரதமராவேன்" என்கின்றது ரிபப்ளிக். இதற்கு மத்தியில் இந்தியா டுடேயில் "ராகுல் 2019ல் பிரதமராக விரும்புகின்றார்" என்கின்றது. அட யாரை நம்புவது என்று நான் முழித்துக் கொண்டிருக்க, யாரையும் நம்பாதே "2019ல் நான் தான் பிரதமர்" என்று கூறிவிட்டு செல்கின்றார் என்னுடைய ப்ரொடியூசர். ஒரு வேலை 2019ல் ராகுல் பிரதமராவார் எனில் இது தான் அவர் கூறிய உண்மையான வார்த்தைகாள் " நான் பிரதம அமைச்சர் ஆவேன் என்பது, இந்த தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைப் பொறுத்துதான்". இதைத் தான் ராகுல் கூறினார்.

மறந்துவிட்டேன், இன்றைய பிரேக்கிங் நியூஸ் டேக்லைன்ஸ் பற்றியும் சொல்லிவிடுகின்றேன். "வட இந்தியாவை தாக்கிய மோடி சூறாவளியை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருகின்றது இந்த மோடி பயணம்". "வொக்கலிங்கர்கள் மற்றும் லிங்காயத்துகளுடன் சோனியா காந்தி மோடியின் தாய் மொழியில் பேசுகின்றார்". "ராகுல் பிரதமாராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார்" "போலியாக வெளியிடப்படும் செய்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்ம்ரித்தி இரானி"

இன்றைய விவாத மேடையில் எம்.ஏ. ஜின்னா. வி.டி. சவர்கர் இந்த இரண்டு நபர்களின் ஓவியங்களில் எந்த ஓவியம் அழகாக இருக்கின்றது என்பதைப் பற்றி தான் பேசப் போகின்றோம். சிறப்பு என்று நானே யோசித்துக் கொண்டேன்.

எல்லாத்தையும் விடுங்க, நாம் சோனம் கபூரின் திருமணத்தைப் பற்றி பேசுவோம். அனைத்து இந்தி சேனலிலும் அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான் என்னுடைய ஒப்பனை அறையில் சோனம் சங்கீத் நிகழ்ச்சியின் வீடியோவிற்கு ஏற்றபடி ஆடிக் கொண்டிருக்கின்றேன். அறையின் கதவை திறந்து ப்ரொடியூசர் கத்திக் கொண்டிருக்கின்றார். அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் கர்நாடக தேர்தல் ஆணையத்திடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது அவள் என்னை, ஒரு மூத்த அரசியல்வாதியிடம் அமெரிக்காவில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஏன் தேவை இல்லாமல் ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு வலுக்கட்டாயமாக ஆள் சேர்த்துக் கொண்டிருக்கின்றார் என்று விவாதம் நடத்தச் சொல்கின்றாள். இந்நள்ளிரவில் டேக்லைனிற்கு நான் யாரை எழுப்புவது. மணி சங்கர் ஐயர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???. அவரைத் தான் எழுப்பப் போகின்றேன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், 10.05.18 அன்று ஷைலஜா பாஜூபாய் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில் : நித்யா பாண்டியன்.

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment