பட்டினியால் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் எனத் தெரியாது: எந்த நாடும் பட்டினி சாவை ஒத்துக் கொள்ளாது

மூடப்பட்ட சிறு மற்றும் குறு தொழில்களை மீண்டும் திறக்க முடியாது என்பதே உண்மை.

By: Updated: May 5, 2020, 02:04:40 PM

ப.சிதம்பரம், கட்டுரையாளர்.

கோவிட் – 19-க்கு எதிரான போர் மற்றும் அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார விளைவுகள் ஆகிய அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகளே தலைமை ஏற்று செய்கின்றன. நாம் அதை கடைபிடிக்கின்றோம். அரசை பின்தொடர்பவர்களாக நாம் நிறைய விஷயங்களை கற்பனை செய்துகொள்ளலாம்.

முதலில், தடுப்பு மருந்தின்றி அந்த வைரசை நாம் எதிர்கொள்ள முடியுமா என கற்பனை செய்து பாருங்கள். அது நம்மை ஊரடங்கு தான் நோயை குணப்படுத்தும், என கற்பனை செய்துகொள்ள வழிவகுக்கும். குணமடைவது நிறைவாகும் வரை, ஊரடங்கு வைரஸ் பரவலை நிறுத்தும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். உண்மையில் ஊரடங்கு நோயை குணப்படுத்தாது. அல்லது வைரஸ் பரவுவதை ஊரடங்கு தடுக்குமா? தொற்று பரவுவதை தாமதப்படுத்தும். இந்த நேரத்தில் நாம் நம் மருத்துவம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம். விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தொற்று ஏற்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தயாராகலாம். ஊரடங்கு வேண்டும் என்று கேட்டவர்கள் எல்லாம் உண்மை நிலையை புரிந்துக் கொண்டார்கள். மே 3-ம் தேதியோடு அரசுக்கு முழுதாக அவற்றை செய்வதற்கு 40 நாட்கள் இருந்தது. இங்கு கேள்வி என்னவெனில், அரசுக்கு இன்னும் நேரம் வேண்டுமா?

இரண்டாவது, தங்களின் வீடுகளுக்கு திரும்புவதற்கு தடுக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், முகாம்களிலோ அல்லது தற்காலிக இடங்களிலோ தங்க வைக்கப்பட்டவர்கள், வாழ்வதற்கு உகந்த இடத்தில் இருக்கிறார்களா? அவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறதா? அதன் மூலம் அவர்கள் திருப்தியடைகிறார்களா? அந்த முகாம்களை டெல்லி போலீசார் ஆய்வு செய்த பின்னர், உண்மை நிலை என்ன என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. ஃபேன்கள் இயங்கவில்லை. மின்சாரம் இல்லை. கழிவறைகள் எப்போதாவது தான் சுத்தம் செய்யப்படுகிறது. குடும்பத்தினர் வசிக்கும் நிலை இல்லாததால் நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து கிளம்பவே முயற்சிக்கிறார்கள். அரசு பணியாளர்களின் முரட்டுத்தனமான நடத்தைகள், உணவு தரமின்மை, கை கழுவும் திரவம், கை சுத்திகரிப்பான் போன்றவை இல்லாதது, சுகாதாரமற்ற கழிவறைகளிலிருந்து வீசும் துர்நாற்றம், கழிவறைகளில் காலை 7 முதல் 11 மணி வரை மட்டுமே வழங்கப்படும் தண்ணீர், குளிப்பதற்கு ஒரு சோப்பு மட்டுமே வழங்கப்பட்டு, துணி துவைக்கும் சோப்பு வழங்கப்படாதது, கொசுக்கடி போன்ற காரணங்களால் அங்கு தங்கியுள்ளவர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்லவே விரும்புகின்றனர். தங்குமிடங்களின்(தன்னார்வத்தில் இங்கு தங்குவார்கள்) நிலை இதுவாக இருக்கும்போது, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களின்(ஆர்வமின்றி இங்கு தங்குவார்கள்) நிலையை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

மூன்றாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் 6 முதல் 10 பேர் தங்கக்கூடிய தங்களுடைய ஒற்றை அறை கொண்ட வசிப்பிடங்களிலேயே, வருமானமின்றி, வேலையின்றி, பணமின்றி அவர்களின் குடும்பத்திற்கு தேவையான பணம் அனுபுவதற்கு வழியின்றி இருக்கிறார்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இது போன்ற நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் அரசின் எவ்வித உதவியுமின்றி, ரேஷன் பொருட்களும் கிடைக்கப்பெறாமல், பணமும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே ஆசை ஒன்று மட்டுமே. அது வீட்டிற்கு திரும்பிச் செல்வதாகும். உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், அவர்களுக்கு சிறப்பு நடவடிக்கையாக பேருந்துகளை அனுப்பி தங்கள் மாநிலத்திற்கு திரும்ப அழைத்துக் கொண்டன. பீகார் மறுத்தது. ஏப்ரல் 29-ம் தேதி வரை மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை. தற்போது இடை நில்லா ரயில்கள் மூலம் அத்தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற மற்ற மாநிலங்களின் கோரிக்கையையே பீகாரும் தற்போது கோருகிறது.

நான்காவதாக, வேலை இழப்புகள் இல்லை மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வரை வேலைகள் தொடரும் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆனால் உண்மை என்னவெனில், தொழிலாளர்கள் பங்கேற்பு 35.4 சதவீதமாக குறைந்திருந்தபோது, வேலையின்மை 21.1 சதவீதமாக இருந்ததாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஏப்ரல் 27 ம் தேதி அறிவித்தது. மூடப்பட்ட சிறு மற்றும் குறு தொழில்களை மீண்டும் திறக்க முடியாது என்பதே உண்மை. ஒரு குழுவில் 2 முதல் 10 பேருக்கே மற்ற வழிகள் மூலம் சம்பாதிக்க அல்லது புலம்பெயர முடியும். அவர்கள் திரும்பி வருவதற்கு தயாராக இருந்தாலும், செய்து முடியாமல் இருக்கும் வேலையே இருக்கும். சேகரிக்கவேண்டிய ரசீது தொகை மற்றும் கட்டவேண்டிய ரசீது தொகையே அதிகம் இருக்கும். அதுவும் நீண்ட காலமாக மூடக்கிடந்ததற்கு பின் எளிது கிடையாது. அங்கு முதலீடு மற்றும் வங்கியோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் கடன் வசதியோ கிடையாது. வழங்கல் சங்கிலி தடை செய்யப்பட்டது. உற்பத்தியாளர் உற்பத்தியை மீண்டும் தொடராதபோது டீலர்கள் மீண்டும் திறப்பதால் என்ன பயன்? யாரும் அவர்களின் சொந்த பணத்தை முதலீடு செய்து வியாபாரத்தை துவங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வியாபாரத்தை நடத்துவதிலும், அதை மூடுவதிலும் உள்ள வலிகள் பற்றி புரிந்துகொண்டிருப்பார்கள்.

ஜந்தாவதாக, மார்ச் 25ம் தேதி நிதி செயல் திட்டம் 2ன் மூலம் வியாபாரிகளுக்கு குறிப்பாக சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு உதவும் என்று தான் அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் என்பதை கற்பனை செய்யுங்கள். இதை எழுதும் வரை அதுபோல் எதுவும் நடக்கவே இல்லை. நிதிபணிக்குழு ஏதேனும் அறிவுரைகள் வழங்கியதா என்பது நமக்கு தெரியாது. அதற்காக அமைக்கப்பட்ட குழு இன்னும் சிந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. உண்மையில் வங்கிகள் சிறு மற்றும் குறு தொழிகளுக்கோ அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கவோ விரும்பவில்லை. நிதியுடன் வெளியேறவோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியுடன் சேர்த்துவிடவோ நினைக்கின்றன. வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் பணப்புழக்கம் இல்லை. அதனால் அவற்றால் கடன் கொடுக்க இயலாது.

ஆறாவதாக, பெரிய நிறுவனங்கள் எப்படியோ இயங்கும். முன்பைவிட நன்றாகவே இருக்கும். உண்மையில், பெரிய நிறுவனங்களும் பழைய பழக்கங்களை விடுத்து, புதிய பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியிருக்கும். பணத்தை பாதுகாப்பது, முதலீட்டு செலவினங்களை குறைப்பது, திறனை மேம்படுத்துதல், தொழிலாளர்களை குறைத்தால், கடன் இல்லாத மற்றும் வீட்டிலிருந்து பணி செய்யும் வழக்கத்தை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள துவங்கும். பெரிய நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, போட்டி குறையும். (எடுத்துக்காட்டு தொலைதொடர்பு துறை)

ஏழாவதாக, ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பின் பொருளாதாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். நாம் அப்போது வி வளைவை பார்ப்போம். உண்மையில் பணமதிப்பிழப்புக்கு பின்னர், இந்திய பொருளாதாரம் மீளவில்லை. ஜிஎஸ்டிக்குப் பின்னரும் மீனவில்லை. அதனால், ஊரடங்கு முடிந்த பின்னரும் அது மீளாது. சரி போன்ற அளவு வளைவு ஏற்படுவதற்கு அதிக உழைப்பு, திட்டம், கவனித்து செயல்படுத்துவது, பணம், திறந்த சந்தை, புத்திசாலித்தனமான கூட்டணி மற்றும் சர்வதே ஒத்துழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது.

”கற்பனை என்ற ஒரே அயுதம் தான் உண்மைக்கு எதிரான போருக்கு தேவை” என்ற லிவிஸ் கேரோலின் வரிகளை நினைவு கூறுகிறேன்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – We will never know how many people died of starvation

இக்கட்டுரையை எழுதியவர் ப. சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.

தமிழில் : R பிரியதர்சினி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:P chidambaram opinion on migrant workers covid 19 corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X