சபரி விவகாரம் : மற்ற கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன ?

பொது மக்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களின் மனதில் என்று நீடித்து இருப்பவராக பினராயி விஜயன் இருக்கிறார்.

பிரமோத் குமார்

சபரிமலை விவகாரம் : மக்களவைத் தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நேரத்தில் சர்ச்சையை கிளப்பும் விதமாக அமைந்திருக்கிறது சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இந்த தீர்ப்பினை செயல்படுத்த தன் முழுவிருப்பத்தினையும் தெரிவித்திருக்கிறது கேரளாவை ஆட்சி செய்யும் பொது உடமைக் கட்சி. ஆனால் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் கேரள அரசின் இந்த செயலிற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.

100% கல்வி அறிவுடன் திகழும் ஒரு மாநிலம் இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்பதற்கு மாற்றாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அங்கே வாழும் இஸ்லாமிய சமூகத்தினரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.

பிரச்சனை என்னவென்றால் சில இந்து குழுக்கள் பெண்களையும் அங்கு வாழும் மக்களையும் வீதிகளுக்கு அழைத்து போராட்டங்களை மேற்கொள்ள வைத்திருக்கிறார்கள். சில இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பி சவால் விடுத்துள்ளனர்.

ஐயப்பன் பிறந்ததாக கருதப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானம் பகுதியில் இருக்கும் பந்தளம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினார்கள். சேவ் சபரிமலா என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது ?

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐவர் கொண்ட அமர்வு ஐயப்பன் கோவிலில் பெண்களின் அனுமதி குறித்த தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. அதில் நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியாக மிக தெளிவாக அரசியல் சாசனப் பிரிவு 14ன் படி நீதியின் முன் அனைவரும் சமம் என்பதால் நிச்சயம் பெண்களுக்கு கோவிலில் அனுமதி உண்டு என்று தீர்ப்பு கூறியது.

இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது இந்தியாவின் அரசியல் சாசனத்தை மையப்படுத்தியது. 10 வயது முதல் 50 வயதிலான பெண்களை ஆலயத்திற்குள் அனுமதியாமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தான் கூறியிருக்கிறது.

சபரிமலை விவகாரம் : சபரிமலையில் பெண்கள்

1991ம் வருடத்திற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செக்கரட்ரியாக பணியாற்றி வந்த டி.கே.ஏ நாயர் இது குறித்து கூறுகையில் “எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரி மலை சென்ற போது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட போட்டோ இன்றும் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் காட்டிய அந்த போட்டோவில் ஒரு இளம்பெண் கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக இருந்தது.

இது குறித்து பாஜக எந்த ஒரு முடிவினையும் எட்ட இயலாது. ஏன் எனில் இங்கும் 50% மக்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆதரவு அல்லது எதிர்ப்பு ரீதியான கருத்துகள் வாக்கு வங்கியினை நிச்சயமாக பாதிக்கும். இது போன்ற விசயங்களில் தலையிடாமல் இருப்பது தான் சிறந்தது என அமைதியாக இருக்கிறது.

மிகவும் அமைதியாக ஆனால் அதிக ஆளுமையுடன் இருப்பது பொதுவுடமைக் கட்சியின் மாநில அரசு தான். முதலமைச்சர் பினராயி விஜயன் சிறிதும் கூட நேரம் தாழ்த்தாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எவ்வளவு விரைவாக நிறைவேற்ற இயலுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டார். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். தேவசம் போர்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கிஉ கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்.

சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கும் விஜயன் “இது நீதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடாகும். ஆகவே உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பினை நிறைவேற்றுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் சாதாரண மக்களின் இதயத்தையும் விஜயன் வென்றுவிட்டார் என்றால் மிகையாகாது. தோழர்களின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பொதுவுடமைக் கட்சி என்பதால் இது போன்ற நடவடிக்கைகளால் பினராயி விஜயனுக்கோ கட்சிக்கோ எந்த ஒரு இழப்பும் தேர்தலின் போது வராது.

இது போன்ற நடவடிக்கைகளால் இந்துக்களின் வாக்குகள் மேலும் சரியத் தொடங்கும் நிலை ஏற்படும். மைனாரிட்டி மக்கள் பினராயி விஜயனை ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தியிருக்கிறது இந்த தீர்ப்பு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close