About Us
தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி இணைய ஊடகமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (ஐஇ தமிழ்) உங்கள் முன் நிற்கிறது. நம்பகமான, சார்பற்ற செய்திகளுக்கு பெயர் பெற்ற தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் டிஜிட்டல் தமிழ் பதிப்பு இது.
உலகத் தமிழர்களுக்கு- குறிப்பாக தமிழ் இளம் தலைமுறைக்கு துல்லியமாகவும் துரிதமாகவும் செய்திகளை தருவதுதான் ஐஇ தமிழின் நோக்கம். இதற்கு தமிழ் வாசகர்கள் வழங்கி வரும் ஆதரவு எங்களுக்கு பெரும் உந்து சக்தி. தமிழகத்தின் அரசியல்- சமூக உடனடி நிகழ்வுகளையும், அலசல்களையும் அறிய நீங்கள் ஐஇ தமிழை எப்போதும் பின் தொடரலாம். பக்கச் சார்பற்ற, தைரியமான ஊடகவியலை இங்கே உணர்வீர்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில் வெளியாகும் எக்ஸ்க்ளூசிவ் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள் தொடர்ச்சியாக இங்கே காணக் கிடைக்கும். தமிழ் இளம் சமூகம் ஆர்வமுடன் பற்றிப் படர விரும்பும் கல்வி- வேலை வாய்ப்பு செய்திகள் ஐஇ தமிழில் ஸ்பெஷல். லேட்டஸ்ட் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், விளையாட்டு, வைரல் என பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மிக சுலபமாக நீங்கள் கண்டறியும் வகையில் செய்திகளின் வரிசையை அமைத்திருக்கிறோம். உங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளோடு பின்னிப் பிணைந்த லைஃப் ஸ்டைல் செய்திகள் உங்களை கவரும்; நீங்கள் பயன்பெறவும் உதவும். உங்களை மகிழ்விக்கும் சினிமா- சீரியல் சார்ந்த செய்திகளுக்கும் ஐஇ தமிழில் பஞ்சம் இல்லை.
அனைத்து செய்திகளையும் அதே தளத்தில் ஆடியோ வடிவில் கேட்கும் வசதியும் இருக்கிறது. நீளமாக வாசிக்காமல் பளிச்சென படங்களுடன் புரிந்து கொள்ள எங்கள் வெப் ஸ்டோரிகளை பாருங்கள். சுதந்திரமான தைரியமான ஊடகவியலுக்கு எங்களுடன் கரம் கோர்த்து வாருங்கள்.